மாலை நேர ஸ்நாக்ஸ் ரெசிபி: சுட சுட சுவையான மைதா போண்டா!!!

29 January 2021, 7:05 pm
Quick Share

குழந்தைகள் வீட்டில் இருந்தாலே மாலை நேரத்தில் அவர்களுக்கு ஏதாவது ஒரு தின்பண்டத்தை செய்து கொடுக்க வேண்டும் என்று ஆசைப்படுவோம். ஒரு சில சமயங்களில் வீட்டில் எந்த பொருட்களும் இல்லாத போது என்ன செய்வது என யோசிப்பது உண்டு. வெறும் மைதா இருந்தால் போதும். பிள்ளைகளுக்கு அசத்தலான இனிப்பு போண்டா செய்து கொடுக்கலாம். இப்போது மைதா போண்டா எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க…

தேவையான பொருட்கள்:

மைதா மாவு- ஒரு கப்

சர்க்கரை- 1/2 கப்

பேக்கிங் சோடா- 1/2 தேக்கரண்டி

ஏலக்காய் பொடி- 1/2 தேக்கரண்டி 

பால்- தேவையான அளவு

எண்ணெய்- பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

*மைதா போண்டா செய்வதற்கு முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் மைதா மாவு, சர்க்கரை, பேக்கிங் சோடா, ஏலக்காய் பொடி ஆகிய அனைத்தையும் எடுத்து கொள்ளுங்கள்.

*எல்லாவற்றையும் நன்றாக கலந்து கொள்ளவும். 

*இப்போது இதில் கொஞ்சம் கொஞ்சமாக பால் ஊற்றி பிசையவும். போண்டா மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.

*ஒரு கடாயை அடுப்பில் வைத்து போண்டாவை பொரித்து எடுக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும். 

*எண்ணெய் சூடாகும் வரை காத்திருக்கவும். எண்ணெய் மிதமான சூட்டில் இருக்க வேண்டும்.

*இப்போது கலந்து வைத்த மாவில் ஒவ்வொரு ஸ்பூனாக எடுத்து எண்ணெயில் போடவும். 

*போண்டா எல்லா இடங்களிலும் பொன்னிறமாக மாறும் வரை பொரிக்கவும். 

*அவ்வளவு தான்… சுவையான மைதா போண்டா தயார்.

*இதில் வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக நாட்டு சர்க்கரை அல்லது வெல்லம் கூட நீங்கள் பயன்படுத்தலாம்.

Views: - 0

0

0