இந்த தீபாவளிக்கு நம்ம வீட்டிலே செய்யலாம் மொறு மொறு காராசேவு!!!

6 November 2020, 10:05 am
Quick Share

காராசேவு என்றாலே பலருக்கும் பிடித்தமான ஒரு  நொறுக்கு தீனி. இதனை நாம் கடைகளில் இருந்து வாங்கி சாப்பிடுவது உண்டு. ஆனால் இதனை வீட்டிலே எளிய முறையில் செய்யலாம். காராசேவு செய்வது என்பது பெரிய கஞ்டம் ஒன்றுமில்லை. வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே சுலபமான முறையில் காராசேவு எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க…

தேவையான பொருட்கள்:

கடலை மாவு- 2 கப்

அரிசி மாவு- 1/4 கப்

பொட்டுக்கடலை மாவு- 1/2 கப்

பூண்டு விழுது- 2 தேக்கரண்டி

மிளகாய் தூள்- 1/2 தேக்கரண்டி

மிளகுத்தூள்- 1/2 தேக்கரண்டி

சீரகம்- 1/2 தேக்கரண்டி

பெருங்காய பொடி- 1/4 தேக்கரண்டி

சமையல் சோடா- 2 சிட்டிகை

உப்பு- தேவையான அளவு

எண்ணெய்- பொரிக்க தேவையான அளவு

செய்முறை:

காராசேவு செய்வதற்கு முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் அனைத்து பொருட்களையும் சரியான அளவில் சேர்த்து கொள்ளுங்கள். பொருட்கள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று நன்றாக கலக்குமாறு செய்யவும். பூண்டை தோலுரித்து அதனை விழுதாக அரைத்த பின் தான் சேர்க்க வேண்டும். 

இப்போது ஒரு குழி கரண்டி அளவு எண்ணெயை காய்ச்சி மாவில் ஊற்றவும். மாவை நன்றாக கலந்த பின் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி பிசைய ஆரம்பியுங்கள். அதிகப்படியான தண்ணீரை ஊற்றி விடாதீர்கள். பிறகு காராசேவு அதிகப்படியான எண்ணெயை குடிக்கும். மாவை பிசைந்த பிறகு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்து கொள்ளவும்.

முறுக்கு பிழியும் அச்சில் மாவை உள்ளே வைக்கவும். காராசேவு செய்வதற்கு மூன்று ஓட்டை கொண்ட அச்சை நீங்கள் பயன்படுத்த வேண்டும். கடாயில் எண்ணெயை சூடாக்கி நேரடியாக காராசேவை எண்ணெயில் பிழியலாம். உங்களுக்கு தேவையான நீளத்திற்கு பிழிந்து கொள்ளுங்கள். எண்ணெய் நன்றாக சூடானதும், அடுப்பை சிம்மில் வைத்து காராசேவை பிழிய வேண்டும். காராசேவு பொன்னிறமாக மாறி மொறு மொறுவென்று வந்தவுடன் எடுத்து விட வேண்டியது தான். அவ்வளவு தான்… அசத்தலான தீபாவளி பலகாரம் தயார்.

Views: - 32

0

0

1 thought on “இந்த தீபாவளிக்கு நம்ம வீட்டிலே செய்யலாம் மொறு மொறு காராசேவு!!!

Comments are closed.