முட்டை இல்லாமல் அருமையான வெண்ணிலா கப் கேக் வீட்டில் எப்படி செய்வது???

13 January 2021, 10:30 am
Quick Share

கேக் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். ஆனால் அசைவம் சாப்பிடாதவர்களுக்கு கேக் சாப்பிட வேண்டும் என்ற ஏக்கம் இருக்கும். உங்கள் ஏக்கத்தை பூர்த்தி செய்ய முட்டை சேர்க்காத வெண்ணிலா கேக் எப்படி செய்வது என இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க… 

தேவையான பொருட்கள்: 

3/4 கப் – மைதா மாவு 

6 தேக்கரண்டி – சர்க்கரை 

¼ கப் – எண்ணெய் 

¼ தேக்கரண்டி – சமையல் சோடா 

1/2 தேக்கரண்டி – வெண்ணிலா எசன்ஸ்

1/2 தேக்கரண்டி – பேக்கிங் பவுடர் 

½ கப் – தயிர் 

செய்முறை:

* ஒரு அகலமான பாத்திரத்தில், அளவீடுகளின்படி பேக்கிங் பவுடர் மற்றும் தயிர் எடுத்துக் கொள்ளுங்கள். நன்கு கலந்து, தயிர் நுரைத்து வரும் வரை கலந்து 15 நிமிடங்கள் தனியாக வைக்கவும். 

* ஒரு தனி கிண்ணத்தில்,  சர்க்கரை மற்றும்  எண்ணெயை எடுத்துக் கொள்ளுங்கள். இவற்றை ஒன்றாக கலந்து, பின்னர் நீங்கள் முன்பு வைத்த  தயிரை கலவையையும் சேர்க்கவும். இது சில நிமிடங்கள் அப்படியே இருக்கட்டும். பின்னர் வெண்ணிலா எசன்ஸ்  சேர்க்கவும். 

* இப்போது கிண்ணத்திற்கு மேலே ஒரு சல்லடை வைத்து அதில் மைதா மாவு மற்றும் பேக்கிங் பவுடரை சலிக்கவும். மாவை நன்றாக கலக்கவும். இது உங்கள் கப்கேக்குகளை மேலும் பஞ்சுபோன்றதாக மாற்றும். 

* ஒரு கப்கேக் டிரே எடுத்து ஒவ்வொன்றிலும் நாம் தயார் செய்து வைத்த   கலவையுடன் நிரப்பவும். இதனை 180 டிகிரி செல்சியஸில் 20-25 நிமிடங்கள் அடுப்பில் வைக்கவும். அவ்வளவு தான். ருசியான கப் கேக் தயார்.

Leave a Reply