இந்த மாதிரி வாழைக்காய் வறுவல் நீங்க கண்டிப்பா சாப்பிட்டு இருக்கவே மாட்டீங்க…!!!

Author: Hemalatha Ramkumar
20 September 2021, 10:28 am
Quick Share

வாழைக்காய் வறுவல் என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு காய். வாழைக்காயில் உள்ள நார்ச்சத்து உணவின் செரிமானத்திற்கு பெரிதும் உதவுகிறது. மேலும் உடலில் உள்ள கொழுப்பு செல்களை அழிக்கவும் உதவுகிறது. அது மட்டும் இல்லாமல் வாழைக்காயில் வைட்டமின், கால்சியம் மற்றும் மெக்னீசியம் நிறைந்துள்ளதால் இதனை அடிக்கடி நம் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இப்போது ஒரு வித்தியாசமான வாழைக்காய் ரெசிபி எப்படி செய்வது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
வாழைக்காய்- 2
பெரிய வெங்காயம்- 1
நசுக்கிய பூண்டு பல்- 6 குழம்பு மிளகாய்த் தூள்- இரண்டு தேக்கரண்டி பெருங்காயத் தூள்- 1/4 தேக்கரண்டி
கடுகு- 1/4 தேக்கரண்டி உளுந்து- ஒரு தேக்கரண்டி மிளகு, சீரகம் -1/4 தேக்கரண்டி கறிவேப்பிலை -ஒரு கொத்து
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு -தேவையான அளவு

செய்முறை:
* முதலில் வாழைக்காயை தோல் சீவி, நறுக்கி கொள்ளவும்.

* வாழைக்காயை அரியும்போது அதனை தண்ணீரல் போட்டு வைத்தால் கருத்து போகாது.

* அடுத்ததாக வாழைக்காயை வேக வைத்து கொள்ளுங்கள்.

* வாழைக்காய் சட்டென்று வெந்துவிடும் என்பதால் கவனமாக இருங்கள்.

*வாழைக்காய் ஆறிய பின் அதில் மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

* இப்போது அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு மற்றும் கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

* அடுத்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

* பின்னர் பிரட்டி வைத்துள்ள வாழைக்காயை சேர்த்து கிளறவும்.

* ஐந்து நிமிடங்களுக்கு நன்கு வதக்கிய பின் அடுப்பை அணைத்து சுவையான வாழைக்காய் வறுவலை என்ஜாய் பண்ணுங்க.

Views: - 265

0

0