வித்தியாசமான ருசியில் உருளைக்கிழங்கு பூரி ரெசிபி!!!

Author: Hemalatha Ramkumar
16 October 2021, 12:53 pm
Quick Share

பொதுவாக நாம் சாப்பிடும் காலை உணவு மிகவும் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். காலையில் இட்லி, தோசை, பூரி, பொங்கல் போன்றவை செய்வோம். இவற்றில் பூரி என்றாலே ஸ்பெஷல். இந்த பூரியை இன்னும் ஸ்பெஷலாக மாற்ற உருளைக்கிழங்கு பூரி எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க…

தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு- 3
மிளகாய் தூள்- ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள்- 1/4 தேக்கரண்டி
கரம் மசாலா- 1/2 தேக்கரண்டி
சீரகத் தூள்- 1/2 தேக்கரண்டி
உப்பு- தேவையான அளவு
கொத்தமல்லி தழை- சிறிதளவு
கோதுமை மாவு- 2 கப்
எண்ணெய்- தேவையான அளவு
வெந்நீர்

செய்முறை:
*முதலில் மூன்று உருளைக்கிழங்கை நன்கு வேக வைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

*ஒரு அகலமான பாத்திரத்தில் வேக வைத்த உருளைக்கிழங்கை மசித்து வைக்கவும்.

*இதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், சீரகத் தூள், கரம் மசாலா,உப்பு, நறுக்கிய கொத்தமல்லி தழை ஆகியவற்றை சேர்த்து பிசையவும். உருளைக்கிழங்கு மசாலா இப்போது தயாராக உள்ளது.

*”இப்போது வேறொரு பாத்திரத்தில் கோதுமை மாவு, அதற்கு தேவையான உப்பு சேர்த்து கலக்கவும்.

*இதில் நாம் தயார் செய்து வைத்த உருளைக்கிழங்கு மசாலாவை சேர்த்து பிசையவும்.

*கொஞ்சம் கொஞ்சமாக வெந்நீர் சேர்த்து மாவை சாஃப்டாக பிசையவும்.

*இரண்டு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

*பின்னர் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி பூரி கட்டை கொண்டு தேய்க்கவும்.

*கடாயில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து, எண்ணெய் காய்ந்ததும் பூரியை போட்டு எடுத்தால் சுவையான மொறு மொறு உருளைக்கிழங்கு பூரி தயார்.

Views: - 208

0

0