ஆஹா… பார்க்கவே அட்டகாசமா இருக்கே: இறால் தவா ஃப்ரை!!!

Author: Hemalatha Ramkumar
8 October 2021, 7:38 pm
Quick Share

மீன் வகைகளில் இறால் பலரது ஃபேவரெட். இறால் மீன்களை பல விதங்களில் செய்யது சாப்பிடலாம். இன்று நாம் பார்க்க இருப்பது இறால் தவா ஃப்ரை. இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ருசித்து சாப்பிடும் ஒரு ரெசிபி. இப்போது இறால் தவா ஃப்ரை எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க…

தேவையான பொருட்கள்:
இறால்- 1/2 கிலோ
மஞ்சள் தூள்- 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள்- 2 தேக்கரண்டி
மல்லித்தூள்- 1 1/2 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது- 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய்- 3
எண்ணெய்- தேவையான அளவு
உப்பு- தேவையான அளவு
கறிவேப்பிலை- ஒரு கொத்து

செய்முறை:
*இறால் தவா ஃப்ரை செய்வதற்கு ஒரு அகலமான பாத்திரத்தில் சுத்தம் செய்த இறால் மீன்கள்,
மிளகாய் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ளவும்.

*இந்த கலவையை பதினைந்து நிமிடங்கள் ஊற வைக்கவும்.

*இப்போது அடுப்பில் தவா வைத்து அதில் எண்ணெய் ஊற்றவும்.

*எண்ணெய் சூடானதும் அதில் கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து கலந்து விடவும்.

*பின்னர் ஊற வைத்த இறால் துண்டுகளை சேர்க்கவும்.

*இறால் வெந்து மசாலாவின் பச்சை வாசனை போனவுடன் அடுப்பை அணைத்து இறால் துண்டுகளை எடுத்து விடலாம்.

*இப்போது சுவையான இறால் தவா ஃப்ரை பரிமாற தயாராக உள்ளது.

Views: - 125

0

0

Leave a Reply