ரோட்டோர கடைகளில் விற்கப்படும் வெள்ளை பட்டாணி மசாலா எப்படி செய்வது…???

Author: Hemalatha Ramkumar
19 October 2021, 11:33 am
Quick Share

மாலை நேரத்தில் டீயுடன் சாப்பிடுவதற்கு ஒரு அசத்தலான சாட் ரெசிபி தான் நாம் இன்று பார்க்க போவது. இது வட இந்தியாவில் ரகடா சாட் என்று அழைக்கப்படுகிறது. இப்போது வெள்ளை பட்டாணி மசாலா எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க…

தேவையான பொருட்கள்:
வெள்ளை பட்டாணி- 200 கிராம்
பெரிய வெங்காயம்- 1
மஞ்சள் தூள்- 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள்- 1 தேக்கரண்டி
கரம் மசாலா- 1 தேக்கரண்டி
எண்ணெய்- 3 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது- 1 தேக்கரண்டி
கொத்தமல்லி தழை- சிறிதளவு
உப்பு- தேவையான அளவு

செய்முறை:
*வெள்ளை பட்டாணி மசாலா செய்வதற்கு முதலில் வெள்ளை பட்டாணியை எட்டு மணி நேரம் ஊற வைக்கவும்.

*ஊற வைத்த பட்டாணியை ஒரு குக்கரில் சேர்த்து அதனோடு நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், மஞ்சள் தூள் மற்றும் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி ஐந்து விசில் வரும் வரை வேக விடவும்.

*இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றவும்.

*எண்ணெய் காய்ந்ததும் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

*பின்னர் மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து கிளறவும்.

*மசாலா நன்கு வறுப்பட்டதும் அதில் வேக வைத்த பட்டாணியை சேர்க்கவும்.

*பட்டாணி வேக வைத்த தண்ணீர் உடன் அதனை சேர்க்கவும்.

*பாதி பட்டாணியை நன்கு மசித்து விடவும்.

*கடைசியில் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

*அவ்வளவு தான்… ருசியான வெள்ளை பட்டாணி மசாலா தயார்.

Views: - 406

0

0