ஸ்ட்ராபெர்ரி வைத்து இப்படி ஒரு அட்டகாசமான இனிப்பு பண்டமா…???

25 February 2021, 2:55 pm
Quick Share

பசி எப்போது வரும் என்றே சொல்ல முடியாது. அது எந்த நேரத்திலும் வரலாம். இது போன்ற சமயங்களில் நாம் உருளைக்கிழங்கு சிப்ஸ், வறுத்த உணவுகள், பிஸ்கட் போன்றவற்றை சாப்பிடுகிறோம். ஆனால் அதற்கு பதிலாக  ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் சாப்பிடுவது நமது பசியையும் ஆற்றும், அதே நேரம் உடலுக்கும் பலம் தரும். எனவே உங்களுக்கு  உதவுவதற்கு, ஒரு சிறப்பு ரெசிபியை இந்த பதிவில் பார்ப்போம். இது ஃபிரஷ், பருவகால ஸ்ட்ராபெர்ரிகளை கொண்டு செய்யப்படுகிறது. இதற்கு ஸ்ட்ராபெரி பைட்ஸ் என்று பெயர். 

தயிர் மற்றும் அக்ரூட் பருப்புகள் இந்த செய்முறைக்கு கூடுதல் அளவு புரதத்தை அளிக்கின்றன. அதே நேரத்தில் புதிய, பருவகால ஸ்ட்ராபெர்ரிகளில் நோய் எதிர்ப்பு சக்தியை ஆதரிக்கும் வைட்டமின் C யில் நிரம்பியுள்ளன. 

தேவையான பொருட்கள்: 

¼ கப் – அக்ரூட் பருப்புகள்

¼ கப் – அரைத்த தேங்காய்

1 தேக்கரண்டி -தேன்

2 தேக்கரண்டி – ஆலிவ் எண்ணெய்

1 கப் – ஸ்ட்ராபெர்ரி

½ கப் – தயிர்

செய்முறை: 

* ஒரு மிக்ஸி ஜாரில்  அக்ரூட் பருப்புகள், தேங்காய், தேன் மற்றும் ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து கொர கொரவென்று அரைக்கவும்.

* ஒரு மினி கப்கேக் டின்னை எடுத்து அதன் மீது ஆலிவ் எண்ணெயை   தடவவும்.

* கப்கேக் குழி ஒவ்வொன்றிலும் நாம் தயார் செய்து வைத்த  கலவையை ஊற்றவும்.

* ஸ்ட்ராபெர்ரிகளை மிக்ஸி ஜாரில் போட்டு கூழாக அரைத்து கொள்ளவும்.

* ஸ்ட்ராபெர்ரி கூழை ஒரு சிறிய கிண்ணத்தில் ஊற்றி தயிரோடு கலக்கவும்.

* ஸ்ட்ராபெர்ரி கலவையை கப் கேக் குழியில் ஏற்கனவே ஊற்றி வைத்துள்ள கலவை மீது ஊற்றவும்.

* இதனை ஃபிரிட்ஜின் ஃப்ரீசரில் வைக்கவும். 30 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை வைத்தால் போதும்.

*ஜில்லென்று எடுத்து பரிமாறவும்.

Views: - 12

0

0