வெங்காயம் இல்லாமல் ஒரு புதுவித குழம்பு… சிம்பிளா ருசியா இருக்கும்… ஒரு முறை டிரை பண்ணி பாருங்க!!!

17 November 2020, 9:14 am
Quick Share

பெரும்பாலான தென்னிந்திய உணவுகளில் வெங்காயம் இல்லாமல் இருக்காது. ஆனால் இன்று வெங்காயம் விற்கிற விலைக்கு பலருக்கு என்ன குழம்பு வைப்பது என தெரியாமல் திணறிப் போகின்றனர். இனி நீங்க ஃபீல் பண்ண வேண்டாம். வெங்காயமே இல்லாமல் ஒரு அசத்தலான குழம்பு வைப்பது எப்படி என்று இந்த பதிவில் பார்ப்போம். 

தேவையான பொருட்கள்:

தக்காளி- 3

வேர்க்கடலை- 5 தேக்கரண்டி

எண்ணெய்- 2 தேக்கரண்டி

கடுகு- 1/2 தேக்கரண்டி

பூண்டு- 4 பல்

கறிவேப்பிலை- ஒரு கொத்து

சீரகம்- 1/2 தேக்கரண்டி

மிளகாய் தூள்- 1 தேக்கரண்டி

மல்லித்தூள்- 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள்- 1/2 தேக்கரண்டி

கரம் மசாலா- 1/2 தேக்கரண்டி

கொத்தமல்லி தழை- சிறிதளவு

உப்பு- தேவையான அளவு

செய்முறை:

இந்த குழம்பு செய்வதற்கு முதலில் வறுத்த வேர்க்கடலையை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து எடுத்து கொள்ளுங்கள். இதனை விட்டு விட்டு அரைக்க வேண்டும். இல்லையென்றால் எண்ணெய் வழிவது போல ஆகி விடும். கொரகொரப்பாக 80 சதவீதம் அரைத்தாலே போதும். 

அடுத்து ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு, பூண்டு, சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளித்து கொள்ளுங்கள். இப்போது நறுக்கிய தக்காளி பழங்களை போட்டு வதக்கவும். பிறகு குழம்பிற்கு தேவையான உப்பு, மஞ்சள் தூள், கரம் மசாலா, மிளகாய் தூள் ஆகியவை சேர்த்து வதக்கவும். 

மசாலா பொருட்களின் பச்சை வாசனை போன பிறகு 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி அரைத்து வைத்த வேர்க்கடலையை சேர்க்கவும். குழம்பு கெட்டியானதும் மேலும் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி மூடி வைத்து பத்து நிமிடங்கள் கொதிக்க விடவும். கடைசியில் கொத்தமல்லி தழை தூவி குழம்பை பரிமாற வேண்டியது தான். இது இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, சுடு சாதம் ஆகியவற்றிற்கு அட்டகாசமான காம்பினேஷன்.

Views: - 39

0

0

1 thought on “வெங்காயம் இல்லாமல் ஒரு புதுவித குழம்பு… சிம்பிளா ருசியா இருக்கும்… ஒரு முறை டிரை பண்ணி பாருங்க!!!

Comments are closed.