வெறும் இரண்டே பொருட்களில் எச்சில் ஊற செய்யும் மொஸெரெல்லா சீஸ் தயார்!!!

20 November 2020, 10:30 am
Cooking Tips - Updatenews360
Quick Share

சீஸ் என்று சொன்னாலே சிலருக்கு வாயில் எச்சில் ஊறும். ஆனால் கடைகளில்  இருந்து சீஸ் வாங்குவதற்கு பதிலாக, தொந்தரவு இல்லாத செய்முறையை பயன்படுத்தி  நீங்கள் அதை வீட்டிலேயே செய்யலாம் என்று  சொன்னால் உங்களால் நம்பமுடிகிறதா? அதுவும் இரண்டே பொருட்களுடன்? இது எப்படி சாத்தியம் என்று நீங்கள்  யோசித்துக்கொண்டிருந்தால், உங்களுக்கான பதில் இங்கே உள்ளது. மொஸெரெல்லா சீஸ் வீட்டிலேயே தயாரிப்பதற்கான ஒரு செய்முறையை இங்கே பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்:

1.5 லிட்டர் – முழு கொழுப்பு பால் 

¼ கப் – வினிகர் 

செய்முறை:

* ஒரு கடாயை அடுப்பில் வைத்து, நடுத்தர தீயில் பாலை சூடாக்கவும். 

*தொடர்ந்து பாலை கிளறி கொண்டே இருங்கள்.  

*நீங்கள் பாலை 32 டிகிரி செல்சியஸ் வரை கொதிக்க வைக்கவும். 

*அதே சமயம் பாலை அதிகமாக சூடாக்க வேண்டாம்.  

* இப்போது வினிகரை கொஞ்சம் கொஞ்சமாக  பாலில் சேர்க்கவும். 

*வினிகர் ஊற்றியவுடன் பால் தயிர் மற்றும் மோர் பிரிந்து வருவதை நீங்கள் காணலாம்.   

* இப்போது ஒரு பெரிய கரண்டியால் தயிரை வெளியே எடுத்து ஒரு துணி மூலமாக அதில் உள்ள  தண்ணீரை பிழிந்து  விடுங்கள். இதனை தனியாக  வைக்கவும்.  

* இப்போது 75 டிகிரி செல்சியஸில் மோரை  மீண்டும் சூடாக்கவும். 

*பின்னர் எடுத்து வைத்த தயிரை நனைத்து இரண்டு நிமிடங்கள் ஊறவைத்து பின் வெளியே எடுத்து பிழிந்து  விடுங்கள். 

*இந்த செயல்முறையை சுமார் நான்கு முதல் ஐந்து முறை செய்யவும். 

*பாலாடைக்கட்டியில் உப்பு சேர்க்க நீங்கள் மோரில் உப்பு சேர்க்கலாம். 

* சீஸ் பந்தை எடுத்து  குளிர்ந்த நீரில் நனைக்கவும். 

*இரண்டு மூன்று நிமிடங்கள் ஊற வைக்கவும். 

*பிறகு இறுக்கமாக மடித்து, ஒரு மணி நேரம் குளிரூட்டவும். 

*ஒரு மணி நேரம் கழித்து அதை வெளியே எடுத்து, திறந்து, துண்டுகளாக வெட்டவும். 

*இப்போது நாம் வீட்டில் செய்த சீஸ் தயாராக உள்ளது.

Views: - 17

0

0