வித்தியாசமான தயிர் சாண்ட்விச்… இன்றே டிரை பண்ணுங்க!!!
4 March 2021, 1:00 pmமாலை நேரத்தில் டீ, காபியோடு நொறுக்கு தீனி சாப்பிடும் சுகமே தனி தான். அதிலும் தினமும் ஒரு விதமான தின்பண்டத்தை செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். நீங்கள் பல விதமான சாண்ட்விச் செய்து சாப்பிட்டு இருக்கலாம். ஆனால் என்றைக்காவது தயிர் சாண்ட்விச் சாப்பிட்டு இருக்கீங்களா…??? ஆம், இது செம டேஸ்டாக இருக்கும் ஒரு அருமையான ஸ்நாக்ஸ் ரெசிபி ஆகும். இன்று தயிர் சாண்ட்விச் எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க…
தேவையான பொருட்கள்:
4 துண்டு பிரெட்
1/4 கப் நறுக்கிய கேரட்
தேவையான அளவு பொடித்த சர்க்கரை
தேவையான அளவு உப்பு
3/4 கப் முட்டைக்கோசு
1/4 கப் குடை மிளகாய்
3/4 கப் தயிர்
தேவையான அளவு மிளகு
1/4 கப் சோளம்
செய்முறை:
*தயிர் சாண்ட்விச் செய்வதற்கு முன்பு முதலில் தயிரில் காணப்படும் அதிகப்படியான தண்ணீரை வடிகட்டி விடவும்.
*இதற்கு ஒரு சுத்தமான காட்டன் துணியில் தயிரை ஊற்றி அதனை இரண்டு மணி நேரம் ஒரு இடத்தில் தனியாக கட்டி வைத்து விடவும்.
*இப்போது ஒரு அகலமான பாத்திரத்தில் தயிர், சோளம், முட்டைகோஸ், குடை மிளகாய், கேரட் ஆகிய அனைத்தையும் கலக்கவும்.
*இந்த கலவையில் தேவையான அளவு உப்பு, பொடித்த சர்க்கரை மற்றும் மிளகு தூள் சேர்த்து கிளறவும்.
*அடுத்து ஒரு பிரெட் துண்டை எடுத்து அதன் ஓரங்களை வெட்டி எடுத்து விடுங்கள்.
*இந்த பிரெட் மீது நாம் தயார் செய்து வைத்த கலவையை பரப்பவும்.
*மற்றொரு பிரெட் துண்டு எடுத்து இதனை மூடவும்.
*இதனை டோஸ்ட் செய்து சூடாக பரிமாறவும்.
*இப்படியே ஒவ்வொரு சாண்ட்விச்சையும் செய்து மகிழ்ச்சியாக அனுபவியுங்கள்.
0
0