இன்று மாலை உங்கள் வீட்டில் ஆரோக்கியமான, ருசி மிகுந்த இலவங்கப்பட்டை ரோலை செய்து பாருங்கள்!!!

18 November 2020, 2:09 pm
Quick Share

மழை வெளுத்து வாங்கி வருவதால் சுட சுட எதாவது ஸ்னாக்ஸ் செய்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என நினைக்காதவர்கள் மிக குறைவு என சொல்லலாம். இன்று நாம் பார்க்க இருப்பது ஒரு வித்தியாசமான ருசியில் இலவங்கப்பட்டை ரோல். இலவங்கப்பட்டை அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளுக்கு பெயர் பெற்றதால் இந்த ஸ்னாக்ஸ் ஆரோக்கியமானதும் கூட.   

தேவையான பொருட்கள்: 

40 கிராம் – மைதா மாவு 

1.5 தேக்கரண்டி – பேக்கிங் பவுடர் 

ஒரு சிட்டிகை உப்பு  

70 கிராம் – பால் 

3 தேக்கரண்டி – மென்மையாக்கப்பட்ட வெண்ணெய் 

3 தேக்கரண்டி – நாட்டு சர்க்கரை 

2 தேக்கரண்டி – இலவங்கப்பட்டை தூள் 

செய்முறை:

* ஒரு அகலமான பாத்திரத்தில் மைதா மாவை சேர்த்து அதனுடன் உருக்கிய வெண்ணெயை ஊற்றி மாவை பிசையவும். 

*அடுத்ததாக பால் சேர்த்து பிசையுங்கள். இது முடிந்ததும், கலவையை சப்பாத்தி கட்டை கொண்டு நன்றாக விரித்து கொள்ளுங்கள்.  

* இப்போது நாட்டு சர்க்கரை, இலவங்கப்பட்டை மற்றும் சோள மாவை 3 தேக்கரண்டி  வெண்ணெயுடன் கலந்து ஒரு  பேஸ்ட் செய்யுங்கள். 

* அடுத்து, தட்டையாக விரித்த மாவில் இலவங்கப்பட்டை கலவையை நன்றாக பரப்பவும். பின்னர் மாவை நன்றாக, ஒரு இறுக்கமான முறையில் ரோலாக உருட்டவும். 

* அவற்றை துண்டுகளாக வெட்டி சற்று தட்டையாக அழுத்தவும். ஏனெனில் அவை சமைக்கப்படும்போது பெரிசாக உயரும். 

*தயார் செய்த ரோல்களை ஒரு தட்டில் வைக்கவும்.   அவற்றை ஒரு நிமிடம் மைக்ரோவேவில் சமைக்கவும்.  

* அவ்வளவு தான்… சுட சுட இலவங்கப்பட்டை ரோல் தயார். இதனை சூடாக சாப்பிட்டால் தான் நன்றாக இருக்கும்.

Views: - 22

0

0