இன்று உங்கள் வீட்டில் பிளம் கேக் செய்து பாருங்கள்!!!

7 September 2020, 11:51 am
Quick Share

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பது கேக். அதிலும் கிருஸ்துமஸ் பண்டிகையின் போது பிரபலமாக விற்கப்படும் பிளம் கேக் பலரது ஃபேவரெட். இன்று மெது மெது பிளம் கேக் வீட்டில் எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க…

தேவையான பொருட்கள்:

மைதா மாவு- 2 கப்

வெண்ணெய்- 1 கப்

சர்க்கரை- 2 கப்

முட்டை- 5

பேக்கிங் பவுடர்- 1 தேக்கரண்டி

பேக்கிங் சோடா- 1/2 தேக்கரண்டி

வெண்ணிலா எசன்ஸ்- 1 தேக்கரண்டி

பட்டை- 2

கிராம்பு- 4

ஏலக்காய்- 3

கருப்பு திராட்சை- 1 1/2 கப்

செரி- 1 கப்

டூட்டி ஃபுரூட்டி- 1 கப்

வால்நட், உலர்ந்த திராட்சை, முந்திரி பருப்பு- 1 கப்

திராட்சை பழரசம்- 2 கப்

உப்பு- 1/2 தேக்கரண்டி

செய்முறை:

பாரம்பரிய முறையில் செய்யப்படும் பிளம் கேக்கில் போடப்படும் உலர்ந்த பழங்களை ரம்மில் இரண்டு நாட்கள் ஊற வைத்த பின் பயன்படுத்துவார்கள். ஆனால் இன்று நாம் ரம்மிற்கு பதிலாக கிரேப் ஜுஸை பயன்படுத்தப் போகிறோம். இப்போது ஒரு பவுலில் 1 1/2 கப் கருப்பு திராட்சை, ஒரு கப் செரி பழம், ஒரு கப் டூட்டி ஃபுரூட்டி, ஒரு கப் வால்நட், உலர்ந்த திராட்சை மற்றும் முந்திரி பருப்பை சேர்க்கவும். 

இந்த காய்ந்த பழங்களுடன் இரண்டு கப் அளவு கிரேப் ஜுஸ் சேர்த்து அந்த பவுலை ஒரு மூடி போட்டு இரண்டு நாட்கள் ஊற வைக்கவும். ஒரு வேலை உடனடியாக பிளம் கேக் செய்ய வேண்டும் என்று நினைத்தால் இந்த உலர்ந்த பழங்களை தண்ணீரில் கொதிக்க வைத்து பிறகு பயன்படுத்தலாம். இப்போது சர்க்கரை பாகு செய்ய ஒரு வாணலியில் 1/2 கப் சர்க்கரை சேர்த்து 1/4 கப் தண்ணீர் ஊற்றவும்.

தண்ணீர் கொதித்து பிரவுன் கலரில் மாறியதும் 1/2 கப் கொதிக்கும் தண்ணீரரை ஊற்றவும். பச்சை தண்ணீர் ஊற்றினால் சர்க்கரை கட்டியாகி அது கரைந்து வர நேரம் எடுக்கும். அதனால் கொதிக்கும் தண்ணீர் சேர்க்கவும். சர்க்கரை பாகு தண்ணியானதும் இறக்கி வைத்து விடலாம். அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் இரண்டு பட்டை, நான்கு கிராம்பு, மூன்று ஏலக்காய், 1/2 கப் சர்க்கரை போட்டு அரைத்து கொள்ளுங்கள்.

இப்போது ஒரு மிக்ஸிங் பவுலில் ஐந்து முட்டை, ஒரு கப் உருக்கிய அன்சால்டட் பட்டர், 1 1/2 கப் சர்க்கரை, நாம் அரைத்து வைத்த 1/2 கப் சர்க்கரை போட்டு கலந்து கொள்ளவும். இதனோடு இரண்டு கப் மைதா மாவு, ஒரு தேக்கரண்டி பேக்கிங் பவுடர், 1/2 தேக்கரண்டி பேக்கிங் சோடா, 1/2 தேக்கரண்டி உப்பு, நாம் காய்ச்சி வைத்த சர்க்கரை பாகு சேர்த்து நன்றாக கலந்து விடவும். 

சர்க்கரை பாகு ஆறிய பின்பு தான் சேர்க்க வேண்டும். அடுத்தாக ஒரு தேக்கரண்டி  வெண்ணிலா எசன்ஸ், நாம் கிரேப் ஜுஸில் ஊற வைத்த உலர்ந்த பழங்கள் சேர்த்து கிளறி விட்டால் கேக்குக்கான மாவு ரெடி. இப்போது இதனை 10 இன்ச் பேக்கிங் பேனில் ஊற்றி ஓவனுக்குள் வைக்கவும். ஓவனை 350°F ல் சூட்டில் செட் செய்து கொள்ளுங்கள். இந்த கேக் தயாராக கிட்டத்தட்ட 70 ல் இருந்து 80 நிமிடங்கள் வரை ஆகும். அவ்வளவு தான்… பிளம் கேக் தயார். 

Views: - 12

0

0