பத்தே நிமிடத்தில் தயாராகும் ருசியான லன்ச் ரெசிபி!!!

Author: Hemalatha Ramkumar
30 December 2021, 4:58 pm
Quick Share

இந்திய உணவுகள் சாதம் இல்லாமல் முழுமையடையாது. நீங்கள் இந்தியாவின் எந்தப் பகுதியைச் சேர்ந்தவராக இருந்தாலும், பலவகையான சாதம் வகைகளை எப்போதும் காணலாம். திருவிழாவாக இருந்தாலும், திருமண விழாவாக இருந்தாலும், பிறந்தநாள் விழாவாக இருந்தாலும், மெனுவில் எப்போதும் ஒரு சாதம் இருக்கும். அத்தகைய சுவையான மற்றும் எளிதில் தயாரிக்கக்கூடிய சாதம் ஒன்று நெய் சாதம். இது ஒரு பிரபலமான தென்னிந்திய உணவாகும். இது சிக்கன் கிரேவி அல்லது பன்னீர் கிருவியுடன் நன்றாக இருக்கும். இப்போது நெய் சாதம் எப்படி செய்வது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
1 கப் பாஸ்மதி அரிசி
2-3 தேக்கரண்டி நெய்
1 பெரிய வெங்காயம்
1 தேக்கரண்டி இஞ்சி-பூண்டு விழுது
1 தேக்கரண்டி சீரகம் விதைகள்
4-5 புதினா இலைகள்
4-5 கிராம்பு
3-4 ஏலக்காய்கள்
1 நட்சத்திர சோம்பு
1 பிரியாணி இலை
2-இன்ச் இலவங்கப்பட்டை 10-12 முந்திரி
1-2 பச்சை மிளகாய்
10-12 திராட்சை
2 தேக்கரண்டி பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகள்
ருசிக்கேற்ப உப்பு

செய்முறை:
*முதலில் அரிசியை நன்கு கழுவி 20 நிமிடம் ஊற வைக்கவும். *இதற்கிடையில், வெங்காயத்தை மெல்லிய துண்டுகளாக வெட்டவும். *இதேபோல், மிளகாய் மற்றும் புதினா இலைகளையும் நறுக்கவும்.
*இப்போது ஒரு பிரஷர் குக்கர் அல்லது பாத்திரத்தை எடுத்து மிதமான தீயில் அடுப்பில் சூடாக்கவும்.
*அதில் 2-3 தேக்கரண்டி நெய் சேர்க்கவும். *அனைத்து மசாலாப் பொருட்களையும் சேர்த்து மிதமான தீயில் ஒரு நிமிடம் வறுக்கவும். *இப்போது நறுக்கிய மிளகாயைச் சேர்த்து 30-40 விநாடிகள் வதக்கவும். *இஞ்சி பூண்டு விழுதைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி அடுப்பை மிதமாக வைத்துக்கொள்ளவும். *அடுத்து, நறுக்கிய வெங்காயம் மற்றும் நறுக்கிய புதினா இலைகளைச் சேர்க்கவும். *2-3 நிமிடங்கள் வதக்கி, பின்னர் உங்கள் விருப்பப்படி உப்பு சேர்க்கவும்.
*முந்திரி மற்றும் திராட்சை சேர்த்து மேலும் 3-4 நிமிடங்கள் வதக்கவும். *இப்போது அரிசியை நன்கு வடித்து பிரஷர் குக்கரில் சேர்க்கவும். *எல்லாவற்றையும் நன்கு கலந்து, அரிசியை மசாலா மற்றும் வெங்காயத்துடன் சேர்த்து குறைந்தது 4-5 நிமிடங்கள் வறுக்கவும். *பிரஷர் குக்கரைப் பயன்படுத்தினால் 1¾ கப் தண்ணீரைச் சேர்க்கவும் இல்லையெனில் 2 கப் தண்ணீரைப் பயன்படுத்தலாம்.
*நீங்கள் பிரஷர் குக்கரைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், அரிசியை 1 விசில் வரும் வரை சமைக்கவும்.
*மிதமான தீயில் சமைப்பதை உறுதி செய்து கொள்ளவும்.
*விசில் வந்ததும் அடுப்பை அணைத்து, பிரஷர் அடங்கும் வரை காத்திருக்கவும்.
*இதுவே நீங்கள் ஒரு பாத்திரத்தில் சமைக்கிறீர்கள் என்றால், தண்ணீர் கொதிக்கும் வரை அரிசியை சமைக்கவும்.
*அதன் பிறகு, தீயை குறைத்து, அரிசி சரியாக வேகும் வரை சமைக்கவும். *நறுக்கிய கொத்தமல்லி இலைகளால் அலங்கரித்து, கிரேவி, பருப்பு குழம்பு, முட்டை குழம்பு அல்லது சிக்கன் கிரேவியுடன் சூடாகப் பரிமாறவும்.

Views: - 143

0

0