ஒரு போதும் வெள்ளரிக்காயுடன் இதெல்லாம் சாப்பிடாதீங்க!!!

Author: Hemalatha Ramkumar
3 May 2023, 7:32 pm
Quick Share

வெள்ளரிக்காயுடன் இந்த மூன்று பொருட்களை சேர்த்து சாப்பிடுவதால் நமக்கு எந்த நற்பயன்களும் இல்லை.
வெள்ளரிக்காய் நமது உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு வழிகளில் உதவி செய்கிறது. இருப்பினும், வெள்ளரிக்காயுடன் சில உணவுகளை சேர்த்து சாப்பிடுவது நமது உடல் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது.

வெள்ளரிக்காயுடன் சேர்த்து சாப்பிடக் கூடாத உணவு பொருட்கள்:
கோடை காலம் வந்துவிட்டது, இந்த சீசனில் மக்கள் வெள்ளரிக்காயை அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். வெள்ளரிக்காயில் நீர் சத்து நிறைந்துள்ளதால் இது நமது உடல் ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் நன்மை செய்யக்கூடியது. இது உடலில் உள்ள எலக்ட்ரோலைட் குறைபாட்டை நீக்குவது மட்டுமின்றி தசைகள் மற்றும் நரம்புகளுக்கு ஆற்றலை தருகிறது. இது தவிர வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் பல நன்மைகள் ஏற்படுகின்றன.

இருப்பினும் வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் சில தீமைகள் குறித்து பார்ப்போம். உண்மையில், வெள்ளரிக்காயுடன் சில உணவுப் பொருட்களை சேர்த்து உட்கொள்வது நமது ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவு அல்ல.
ஏன் என இங்கு பார்ப்போம்….

வெள்ளரிக்காயுடன் சேர்த்து எந்த உணவு பொருட்களை சாப்பிடக்கூடாது?
வெள்ளரிக்காய் மற்றும் தக்காளி இரண்டையும் சேர்த்து வெஜ்-சாலட்களில் சாப்பிடுவார்கள். ஆனால் ஆனால் உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தமட்டில் இது ஒரு சரியான உணவு அல்ல என்றே கூறலாம். உண்மையில், இவை இரண்டும் செரிமானம் ஆகக்கூடிய முறையானது முற்றிலும் வேறுபட்டது, எனவே அவற்றை ஒன்றாகச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். இந்த இரண்டு உணவுப் பொருட்களையும் சேர்த்து சாப்பிடும் போது அது நமது உடலில் உள்ள அமிலத்தின் pH சமநிலையை பாதிக்கிறது இதனால் உடலில் சிறுசிறு வீக்கங்கள் ஏற்படுகிறது.

பெரும்பாலும் மக்கள் வெள்ளரி மற்றும் முள்ளங்கி இரண்டையும் வெஜ் – சாலட்டில் சேர்த்து சாப்பிடுவார்கள். இவை இரண்டும் ஒன்றுக்கொன்று வினை புரியக்கூடியது. வெள்ளரிக்காயில் அஸ்கார்பேட் என்னும் பொருள் உள்ளது. இது வைட்டமின் சி யை உறிஞ்சக்கூடியது. இந்நிலையில் வெள்ளரிக்கையுடன் முள்ளங்கியை சேர்த்து சாப்பிடும் போது இந்த செயல்பாட்டில் தடையை ஏற்படுத்துகிறது. இது நமக்கு பல்வேறு உடல் நலக்குறைவுகள் ஏற்பட வழி வகுக்கிறது.

உடலுக்கு மிகவும் ஆரோக்கியம் தரக்கூடிய பால் மற்றும் வெள்ளரிக்காயை சேர்த்து சாப்பிடுகிறீர்கள் என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால் உண்மையில் நீங்கள் தவறாக நினைக்கிறீர்கள். பால் ஒரு மலமிளக்கியாகும், ஆனால் வெள்ளரிக்காய் டையூரிடிக் பண்புகளை கொண்டதாகும். இதன் விளைவாக, செரிமான கோளாறுகள் ஏற்படலாம். இதனால் வாந்தி அல்லது வயிற்றுப்போக்கு ஏற்படலாம்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Views: - 674

0

0