30 வயசு ஆகிட்டாலே இதெல்லாம் இனி சாப்பிடாதீங்க!!!

Author: Hemalatha Ramkumar
17 June 2023, 4:16 pm
Quick Share

30 வயதை அடைந்து விட்டால், நமது உடலின் தேவையானது முன்பை காட்டிலும் முற்றிலுமாக மாறிவிடுகிறது. ஆகவே நாம் என்ன உணவு சாப்பிடுகிறோம், என்ன மாதிரியான திரவங்களை பருகுகிறோம் என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நமது ஆயுளின் இந்த கட்டத்தில் தான் நமக்கு பல்வேறு விதமான நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். மூட்டு வலி, வயிறு சார்ந்த பிரச்சனைகள், நீரிழிவு நோய், இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளில் இருந்து நம்மை காத்துக் கொள்ள நாம் சாப்பிடும் உணவுகளுக்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அந்த வகையில் 30 வயதை கடந்து விட்டால் நாம் கட்டாயமாக தவிர்க்க வேண்டிய மூன்று உணவுகள் குறித்து இப்பொழுது பார்க்கலாம்.

உருளைக்கிழங்கு சிப்ஸ்: எனக்கு உருளைக்கிழங்கு சிப்ஸ் பிடிக்காது என்று யாராவது சொல்வார்களா? மிகவும் பிரபலமான இந்த உணவுப்பொருள் பல்வேறு ஃப்ளேவர்களில் வித விதமான பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றது. ஆனால் 30 வயதை அடைந்து விட்டால் உருளைக்கிழங்கு சிப்ஸ் சாப்பிடுவதை தவிர்த்து விடுவது நல்லது. ஏனெனில் இவை செயற்கை பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. மேலும் இதில் உள்ள அதிக சோடியம் ரத்த அழுத்தத்தை அதிகரிக்க கூடும்.

சுவையூட்டப்பட்ட தயிர்: தயிர் நமது உடலுக்கு குளிர்ச்சியை அளித்து பல்வேறு விதமான நன்மைகளை அளிக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் கடைகளில் கிடைக்க கூடிய பல்வேறு சுவைகள் சேர்க்கப்பட்ட தயிரை வாங்கி சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இதில் உள்ள அதிக சர்க்கரை உடலுக்கு பல்வேறு கேடுகளை விளைவிக்கும்.

பாப்கார்ன்:
தற்போது பலர் தியேட்டர் சென்றாலே பார்கார்ன் வாங்கி சாப்பிடாமல் திரும்பி வர மாட்டார்கள். தற்போது வீட்டில் படம் பார்த்தால் கூட கடைகளில் பாப்கார்ன் வாங்கி சாப்பிடும் பழக்கத்திற்கு வந்துவிட்டார்கள். வீட்டில் பாப்கார்ன் செய்து சாப்பிடுவதால் தவறொன்றும் இல்லை. ஆனால் கடைகளில் விற்பனை செய்யப்படும் பாப்கார்ன்கள் உடல் பருமன் முதல் கொலஸ்ட்ரால் வரை உடலுக்கு ஏராளமான பிரச்சனைகளை கொண்டு வருகிறது.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Views: - 247

0

0