தொப்பையைக் குறைக்க ஆயுர்வேதம் சொல்லும் தீர்வுகள்!!!

Author: Hemalatha Ramkumar
27 December 2022, 11:51 am
Quick Share

உடல் எடையை குறைப்பது எளிதான காரியம் அல்ல, குறிப்பாக தொப்பையை குறைக்க பல விதமான முயற்சிகளை செய்ய வேண்டி இருக்கும். இருப்பினும், ஆயுர்வேதத்தில் சில குறிப்பிடத்தக்க சிகிச்சைகள் உள்ளன. அவை என்ன செய்தாலும் குறையாத தொப்பை கொழுப்பை அகற்றுவது மட்டுமல்லாமல், உடல் எடையை குறைக்க இயற்கை உத்திகளையும் வழங்குகிறது. உடற்பயிற்சியின்மை, அதிக தூக்கம், ஆரோக்கியமற்ற உணவு, மற்றும் வாழ்க்கை முறை உள்ளிட்ட காரணிகள் அனைத்தும் எடை அதிகரிப்புக்கு பங்களிக்கின்றன.

உடல் எடையை குறைக்க முயற்சிக்கும்போது, “உணவு, உடற்பயிற்சி மற்றும் தூக்கத்தின் தரம்” ஆகியவற்றில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டியது முக்கியம். நிபுணர்களின் கூற்றுப்படி, கூடுதல் உடல் எடையால் நீங்கள் நீரிழிவு நோய், இதயப் பிரச்சனைகள், நினைவாற்றல் இழப்பு, துரிதப்படுத்தப்பட்ட முதுமை மற்றும் கர்ப்பகால சிக்கல்கள் போன்ற 10 சுகாதார நிலைமைகளை நீங்கள் சந்திக்க நேரிடும். எனவே, இந்த தொப்பை கொழுப்பை குறைக்க ஆயுர்வேதம் என்ன தீர்வுகளை வழங்குகிறது என்று பார்க்கலாம்.

வெந்தயம்:
இது எடை குறைக்கும் மூலிகையாக கருதப்படுகிறது. ஒரு ஸ்பூன் வெந்தய விதைகளை மிக்ஸியில் சேர்த்து ஒரு கரடுமுரடான பேஸ்ட்டாக அரைக்கவும். பின்னர் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து சாப்பிடவும்.

கிரீன் டீ:
ஒரு கடாயில் 5-6 துளசி இலைகளை கொதிக்கவைத்து, பின்னர் இலவங்கப்பட்டை தூள் சேர்த்து மேலும் 2-3 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். வடிகட்டிய பின் குடிக்கவும். கிரீன் டீயில் EGCC இருப்பது உடலின் கொழுப்பை எரிக்கும் செயல்முறையை விரைவுப்படுத்த உதவுகிறது.

இஞ்சி:
இஞ்சி வளர்சிதை மாற்றம் மற்றும் கொழுப்பை எரிக்கும் செயல்முறையை மேம்படுத்துகிறது. இதற்கு தண்ணீரில் இஞ்சி சேர்த்து 10-15 நிமிடங்களுக்கு கொதிக்கவைத்து, வடிகட்டி, குடிக்கவும்.

Views: - 326

0

0