தெரிந்தோ தெரியாமலோ நமது இனப்பெருக்க ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் நம் அன்றாட பழக்க வழக்கங்கள்!!!

Author: Hemalatha Ramkumar
11 April 2023, 12:43 pm
Quick Share

இன்றளவில் ஃபெர்டிலிட்டி சென்டர்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கு முக்கிய காரணம் குழந்தையின்மை ஆகும். குழந்தையின்மைக்கான முக்கிய காரணம் வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறைகளில் ஏற்படுள்ள மாற்றங்கள் ஆகும். பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரை மற்றும் நிறைவுற்ற கொழுப்புகள் ஹார்மோன் சமநிலையின்மை மற்றும் பலவீனமான கருவுறுதலை ஏற்படுத்தக்கூடும். இனப்பெருக்க ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடிய ஒரு சில விஷயங்கள் குறித்து இந்த பதிவில் காணலாம்.

ஆரோக்கியமற்ற உணவு முறை: அதிக அளவு நொறுக்கு தீனிகளை உட்கொள்வது ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை தேர்வாகும். இது ஒரு நபரின் ஆரோக்கியத்தில் தீங்கு விளைவிக்கும் மற்றும் ஆண் மற்றும் பெண் கருவுறுதலை பாதிக்கலாம். ன

உடல் பருமன்: இது ஒரு பெண்ணின் மாதவிடாய் சுழற்சியில் இடையூறுகளை ஏற்படுத்தலாம். மேலும் கருமுட்டை வெளியிடுவதில் சிக்கல் ஏற்படலாம். இது குறைப்பிரசவம், கர்ப்பகால நீரிழிவு அல்லது தாய்வழி உயர் இரத்த அழுத்தக் கோளாறு போன்றவற்றின் விளைவாக சிக்கலான கர்ப்பத்திற்கும் வழிவகுக்கும்.

எடை குறைவாக இருப்பது: எடை குறைவாக இருப்பவர்கள் மாதவிடாய் கோளாறுகள் மற்றும் மாதவிடாய் தாமதம் போன்றவற்றை அனுபவிக்கலாம். இது ஒருவரின் இனப்பெருக்க ஆரோக்கியத்தை பாதிக்கிறது.

புகையிலையின் பயன்பாடு: இதய அல்லது நுரையீரல் நோய்களை ஏற்படுத்துவதைத் தவிர, புகையிலை இன்னும் ஏராளமான தீமைகளை அளிக்கிறது. இது ஆண் மற்றும் பெண் இனப்பெருக்க ஆரோக்கியத்தை பாதிக்கலாம். புகைபிடிக்கும் ஆண்களுக்கு ஒட்டுமொத்த விந்தணுவின் தரம் குறைவதாகக் கூறப்படுகிறது. புகையிலையை உட்கொள்ளும் பெண்களுக்கு கருமுட்டை எண்ணிக்கை குறைவதோடு கருச்சிதைவு ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம்.

மது அருந்துதல்: அதிக அளவு மது அருந்துவதால், ஒருவரின் விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் விந்தணுக்களின் ஒட்டுமொத்த தரம், கருமுட்டை முதிர்ச்சி அடைவதில் தோல்வி, மாதவிடாய் சுழற்சியில் முறைகேடுகள், கருத்தரித்தல் விகிதம் குறைதல் மற்றும் பொருத்துதல் மற்றும் விந்தணு உருவவியல் குறைபாடுகள் ஆகிய பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.

மன அழுத்தம் – நீண்ட காலமாக மன அழுத்தத்தை அனுபவிக்கும் ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவது விந்தணு பகுப்பாய்வு மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இதேபோல், பெண்களின் மன அழுத்தம் கருவுறுதலில் சிக்கலை ஏற்படுத்தும்.

காஃபின் – காபி ஒருவரின் இனப்பெருக்க ஆரோக்கியத்தை பாதிக்கும் என்பதற்கு குறிப்பிடத்தக்க மருத்துவ சான்றுகள் இல்லை என்றாலும் கருத்தரிக்க முயற்சிக்கும் ஒரு பெண், கருத்தரிக்கும் போது ஏதேனும் அசம்பாவிதம் அல்லது கருச்சிதைவு ஏற்படும் அபாயத்தைத் தடுக்க, ஒரு நாளைக்கு ஒரு கப் காபின் மட்டும் குடிக்க அறிவுறுத்தப்படுகிறது.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Views: - 241

0

0