ஃபிரிட்ஜில் இருக்க வேண்டிய அத்தியாவசிய பொருட்கள்… உங்க வீட்ல இதெல்லாம் இருக்கா…???

Author: Hemalatha Ramkumar
28 October 2022, 9:08 am
Quick Share

உறங்கச் செல்வதற்கு 3 மணி நேரத்திற்கு முன் இரவு உணவை உட்கொள்வது சிறந்தது. நீங்கள் படுக்கைக்கு செல்லும் முன் சிறிது பசி எடுப்பது இயற்கையானது. அந்த சமயத்தில் நீங்கள் சாப்பிடும் உணவானது ஆரோக்கியமானதாகவும் கொழுப்பு குறைவாகவும் இருக்க வேண்டும். இது ஒரு சரியான உணவை உருவாக்குகிறது மற்றும் வயிறு நிரம்பிய உணர்வையும் அளிக்கிறது! இது போன்ற நேரத்தில் உங்கள் ஃபிரிட்ஜில் அவசரத்திற்கு ஏதாச உணவுப்பொருட்கள் இருப்பது நல்லது. எனவே, உங்கள் குளிர்சாதன பெட்டியில் எப்போதும் வைத்திருக்க வேண்டிய சில உணவுகள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பழங்கள்: ஆப்பிள்கள், பப்பாளிகள், ஸ்ட்ராபெர்ரிகள் அல்லது திராட்சைகள் குளிர்சாதன பெட்டியில் சேமிக்கப்பட வேண்டிய ஆரோக்கியமான மற்றும் சத்தான பழங்கள். இந்த பழங்கள் உடல் கொழுப்பை எரித்து உடல் எடையை குறைக்க உதவுவதால், டயடில் இருப்பவர்களுக்கு இது நல்லது. சோம்பேறியாக இருக்கும் போது அல்லது வெளியே செல்லும் அவசரத்தில் இந்த பழங்களை எளிதில் சாப்பிடலாம்.

காய்கறிகள்: கேரட் அல்லது தக்காளி போன்ற சில காய்கறிகள் குளிர்சாதன பெட்டியில் சேமிக்கப்படும் வயிறு நிரப்பி மற்றும் சுவையான உணவு. இவை சத்தான மற்றும் கலோரிகள் இல்லாத உணவுகள். தக்காளி உடல் கொழுப்பை எரிக்க வல்லது.

பால்: உணவுப் பற்றாக்குறை ஏற்படும் போது பால் உங்களுக்கு உதவும். பாலில் கால்சியம் அதிகம் உள்ளது மற்றும் கொழுப்பு நீக்கப்பட்ட பாலில் கலோரிகள் இல்லை. சரியான உணவை சாப்பிட, நாளின் எந்த நேரத்திலும் பழங்களுடன் கொழுப்பு நீக்கிய பாலை சாப்பிடுங்கள்!

தயிர்: நீங்கள் அலுவலகம் அல்லது கல்லூரிக்கு தாமதமாக செல்ல நேரும்போது, ​​சிறிது உப்பு அல்லது சர்க்கரையுடன் கூடிய தயிர் சாப்பிடுங்கள்.

எலுமிச்சை: குளிர்சாதன பெட்டியில் எப்போதும் எலுமிச்சை இருக்க வேண்டும். இது கொழுப்பை எரிப்பது மட்டுமல்லாமல், உங்கள் உணவில் வித்தியாசமான சுவையையும் சேர்க்க பயன்படுகிறது.

Views: - 279

0

0