உங்க உடம்புல இரத்தம் குறைவா இருக்கா… இந்த உணவுகளை சாப்பிடுங்க!!!

Author: Hemalatha Ramkumar
16 April 2023, 10:50 am
Quick Share

இன்று பலர் இரத்த சோகையால் பாதிக்கப்படுகின்றனர். இரத்த எண்ணிக்கை குறைவாக இருப்பது பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. நம் உடலில் சிவப்பு இரத்த அணுக்கள் குறைவாக இருந்தால், உடலில் இரத்த எண்ணிக்கை குறைவாக இருக்கும். ஒரு மனித உடல் தினமும் மில்லியன் கணக்கான சிவப்பு இரத்த அணுக்களை உற்பத்தி செய்கிறது. இதனால் இரத்த சோகை உண்டாகும். நீங்கள் சோர்வாக உணர்ந்தாலோ, குறைந்த இரத்த எண்ணிக்கை இருப்பதாக சந்தேகம் இருந்தாலோ, உடலில் இரத்த எண்ணிக்கையை அதிகரிக்கும் உணவுகளை சாப்பிடுவது சிறந்தது. குறைந்த இரத்த எண்ணிக்கையைக் கொண்டிருப்பது உடலின் அத்தியாவசிய செயல்பாடுகளில் சிக்கலை ஏற்படுத்தலாம். எனவே இரத்தத்தை உருவாக்குவது மற்றும் சரியான உணவைப் பின்பற்றுவது அவசியம். ஆகவே, உடலில் இரத்த அளவை அதிகரிக்க உதவும் சில உணவுகள் குறித்து இப்போது பார்க்கலாம்.

சிவப்பு இறைச்சி சிறந்த இரத்தத்தை மேம்படுத்தும் உணவு. ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் இரும்புச்சத்து அதிக அளவில் உள்ளது. சிவப்பு இறைச்சியில் உள்ள இரும்பை இரத்தம் மிக விரைவாக உறிஞ்சுகிறது. மேலும் இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் இரத்த சோகையைத் தடுக்கலாம்.

முட்டை இரத்த எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது. இதில் ஃபோலிக் அமிலம் உள்ளது. இது ஹீமோகுளோபின் அளவை பராமரிக்க உதவுகிறது.

பீன்ஸ் மற்றும் பருப்பு சிறந்த இரத்தத்தை உருவாக்கும் உணவு. சிறந்த அம்சம் என்னவென்றால், அவை இரும்புச்சத்து மட்டுமல்ல, ஃபோலிக் அமிலத்தையும் கொண்டிருக்கின்றன! இவை புதிய இரத்த அணுக்களை உருவாக்கவும் உற்பத்தி செய்யவும் உதவுகின்றன.

பால் மற்றும் சீஸ் போன்ற பால் பொருட்கள் மிகவும் உதவியாக இருக்கும். சோயா மற்றும் பாதாம் பால் இரத்தத்தை அதிகரிக்க பசும்பாலை விட சிறப்பாக செயல்படுகிறது. இது இதயத்தை ஆரோக்கியமாக வைத்து இரத்த அளவை பராமரிக்கிறது.

சிவப்பு செர்ரிகளில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. மேலும் வைட்டமின் சி உடலில் இரும்பு உறிஞ்சுதலை மேம்படுத்துகிறது. உடல் அதிக இரும்புச்சத்தை உறிஞ்சி இரத்த எண்ணிக்கையை அதிகரிக்க செர்ரி பழங்கள் உதவும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்

Views: - 206

0

0