சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய பழங்கள்…!!!

Author: Hemalatha Ramkumar
6 June 2023, 5:14 pm
Quick Share

பொதுவாக இயற்கையாக விளையக்கூடிய பழங்களில் அதிக அளவு புரோட்டின், விட்டமின்கள், தாது சத்துக்கள் உள்ளிட்ட பல வகையான உடலுக்கு நன்மை தரக்கூடிய பல சத்துக்கள் இருந்தாலும் இதனுடன் சர்க்கரையும் சேர்ந்து காணப்படுகிறது. எனவே நீரிழிவு நோய் உள்ளவர்கள் சில பழங்களைச் சாப்பிடுவதில் கவனத்துடன் இருப்பது நல்லது.

நீரிழிவு நோயாளிகளைப் பொறுத்த வரை, ஒவ்வொரு பழமும் ரத்தச் சர்க்கரை அளவை மாற்றும் திறன் கொண்டது. எனவே இவர்கள் முன்னெச்சரிக்கையாக சில பழங்களை உண்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் சில பழங்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை மிக மிக அதிகரித்து அவர்களின் உடலுக்கும் உயிருக்கும் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவை.

நீரிழிவு நோய் உள்ளவர்கள் பழங்களின் ஜி.ஐ (GI – Glycemic Index) குறியீட்டு எண்ணை அறிந்து பின்பு உண்ணுவது மிக நல்லது. நீரிழிவு நோய் உள்ளவர்கள் 50 க்கும் குறைவான அளவு ஜி.ஐ. குறியீட்டைக் கொண்ட பழங்களை உண்ணலாம். ஆப்பிள், பேரிக்காய், கொய்யா, ஸ்ட்ராபெரி போன்றவற்றில் கார்போஹைட்ரேட்டின் அளவு குறைவாக இருப்பதால் இவை குறைந்த அளவு ஜி.ஐ குறியீடு கொண்ட பழங்கள் ஆகும். எனவே நீரிழிவு நோய் உள்ளவர்கள் இந்தப் பழங்களைச் சாப்பிடலாம்.

*முந்திரிப்பழம் மற்றும் பேரிச்சம்பழம்
நீரிழிவு நோயாளிகள் இவற்றை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை அதிகப்படியான ஜி.ஐ. மதிப்பு கொண்டது. அதாவது 105 ஜி.ஐ ஆகும்.

*சப்போட்டா
இந்தப் பழத்தின் ஜி.ஐ. குறியீட்டு எண் 58 ஆக உள்ளதால் சர்க்கரை நோயாளிகள் இதைத் தவிர்க்க வேண்டும். இப்பழத்தில் சர்க்கரை, கார்போஹைட்ரேட் மற்றும் கலோரிகளும் மிக அதிகமாகும்.

*மாம்பழம்
இதன் ஜி.ஐ அளவு 60. இதில் மிகுந்த சர்க்கரை இருப்பதால் இதனை உண்ட சிறிது நேரத்திலேயே ரத்தச் சர்க்கரை அளவு அதிகரிக்கும்.

*வாழைப்பழம்
ஒரு சிறிய வாழைப்பழத்தில் சுமார் பத்து கிராம் அளவிற்கு கார்போஹைட்ரேட் உள்ளது. இதன் ஜி.ஐ. குறியீடு 65 ஆகும். வாழைப்பழங்களைச் சர்க்கரை நோயாளிகள் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

*உலர் திராட்சை
நார்ச்சத்து, வைட்டமின் எனப் பல ஊட்டச்சத்துகள் நிறைந்த உலர் திராட்சையில் அதிக அளவு சர்க்கரையும் உள்ளது. 100 கிராம் திராட்சையில் சுமார் 15 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது.

*தர்பூசணி
குறைந்த நார்ச்சத்து, குறைந்த கலோரி உடைய தர்பூசணி பழத்தில் ஜி.ஐ குறியீடு 72. 100 கிராம் அளவுள்ள தர்பூசணியில் 10 கிராம் அளவிற்கு கார்போஹைட்ரேட் உள்ளது.

*அன்னாசி
இதன் ஜி.ஐ குறியீடு 69 ஆகும். இது அதிகக் கிளைசிமிக் குறியீட்டைக் கொண்டிருப்பதால், இப்பழத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

*சீத்தாப்பழம்
வைட்டமின் சி, கால்சியம், இரும்பு, நார்ச்சத்து நிரம்பிய இப்பழத்தில் சர்க்கரை அதிகம். 100 கிராம் சீத்தாப்பழத்தில் 23 கிராமைவிட அதிகமாக கார்போஹைட்ரேட் உள்ளது.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Views: - 343

0

0