தலைவலி, அசிடிட்டி எதுவா இருந்தாலும் சரி… இருக்கவே இருக்கு கை வைத்தியம்!!!

Author: Hemalatha Ramkumar
15 April 2023, 10:51 am
Quick Share

கோடை காலத்தில் சுட்டெரிக்கும் வெயிலின் காரணமாக நமது உடல் பலவிதமான சவால்களை சந்திக்க நேரிடுகிறது. வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் நீர் போக்கு, சோர்வு மற்றும் பக்கவாதம் போன்ற பல சிக்கல்கள் உண்டாகலாம். இந்தப் பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க நாம் போதுமான நீர்ச்சத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அதோடு ஆடைகள் அணிவதில் கவனம் செலுத்த வேண்டும். மேலும் மதிய வேளையில் வீட்டை விட்டு வெளியே செல்வதை முடிந்த வரை தவிர்க்க வேண்டும். இவை அனைத்தையும் விட சமச்சீரான உணவு எடுப்பது மிகவும் அவசியம். இந்த பதிவில் என்னென்ன மாதிரியான கோடை பிரச்சினைகளுக்கு எந்தெந்த வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

  • நீண்ட காலமாக வாட்டி வரும் வறட்டு இருமலுக்கான ஒரு எளிதான வீட்டு வைத்தியம் தான் பேரீச்சம் பழம் பால். இதனை செய்ய ஆறு பேரீச்சம் பழங்களை எடுத்து அதனை அரை லிட்டர் பாலில் 25 நிமிடங்கள் அடுப்பை மிதமான தீயில் வைத்து கொதிக்க வைக்கவும். பாலின் அளவு கால்பங்காக குறைந்து வரும் வரை அதனைக் கொதிக்க விடவும். பின்னர் பாலை ஆற வைத்து அதனை பருகவும். ஒரு நாளைக்கு மூன்று முறை இவ்வாறு குடித்து வர விரைவில் வறட்டு இருமல் குணமாகும்
  • நீர்ச்சத்து அதிகம் உள்ள வெள்ளரிக்காயில் தாதுக்கள் மற்றும் வைட்டமின்களும் ஏராளமாக உள்ளன. இது பலவிதமான சரும பிரச்சனைகளில் இருந்து நம்மை பாதுகாக்கக்கூடும். முகப்பரு மற்றும் கரும்புள்ளிகளுக்கு சிகிச்சை அளிக்க நீங்கள் வெள்ளரிக்காயை பயன்படுத்தலாம். அதே போல துருவிய தேங்காயை முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தடவி வர கரும்புள்ளிகள் மற்றும் முகப்பரு மறையும்.
  • பலருக்கு கோடை காலம் வந்துவிட்டாலே தலைவலியும் உடன் வந்துவிடும். இதற்கு தர்பூசணி சாறு சிறந்த தீர்வாக அமைகிறது. கோடை வெப்பம் காரணமாக ஏற்படும் தலைவலியில் இருந்து விடுபட தர்ப்பூசணி மிகவும் உதவியாக இருக்கும். தர்பூசணி சாற்றில் ஏகப்பட்ட தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் இருப்பதோடு, இது உடலுக்கு தேவையான நீர் சத்தையும் வழங்குகிறது.
  • அசிடிட்டி என்பது நம் அன்றாட வேலைகளில் தலையிடக்கூடிய ஒரு செரிமான பிரச்சனை ஆகும். ஆனால் அசிடிட்டியை எளிதில் சமாளிக்க ஒரே ஒரு கிராம்பு போதும். அசிடிட்டி ஏற்படும் போதெல்லாம் ஒரு கிராம்பை வாயில் போட்டு மெல்லவும். கிராம்பில் இருந்து கசியும் எண்ணெய் அசிடிட்டி பிரச்சினைக்கு சிறந்த தீர்வாக அமையும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Views: - 257

0

0