பற்கூச்சத்திற்கு இவ்வளவு சிம்பிளான தீர்வு இருக்கா…???

Author: Hemalatha Ramkumar
25 April 2023, 7:17 pm
Quick Share

பற்களில் உள்ள டென்ட் எனப்படும் மேல் அடுக்கு தேய்ந்து விடுவதால், குளிர்ச்சியாகவோ அல்லது சூடாகவோ நாம் ஏதேனும் உணவு பொருட்களை உண்ணும் போது பற்களில் ஒருவித கூச்சம் ஏற்படுகிறது இதையே பல் கூச்சம் என்கிறோம். பல் கூச்சம் எதனால் ஏற்படுகிறது என்பதை இந்த பதிவில் காண்போம்.

பல் கூச்சத்திற்கான காரணங்கள்:
பல் கூச்சத்திற்கு பல வகையான காரணங்கள் இருந்தாலும் இதற்கு முதன்மையான காரணம் சொத்தைப்பல் ஆகும். இரண்டாவது பல் தேய்மானம். அதாவது பற்களின் மேலடுக்கு தேய்கின்ற நிகழ்வை பல் தேய்மானம் என்கிறோம். சிலர் உறங்கும் போது பற்களை கடிக்கும் பழக்கத்திற்கு உள்ளாகின்றனர்.

இவ்வாறு பற்களை கடிக்கும் போது பற்களின் மேல் அடுக்கு தேய்ந்து பல் கூச்சத்தை ஏற்படுத்துகிறது. கடினமான உணவுப் பொருட்களை கடித்து உண்பதன் காரணமாகவும் பல் தேய்மானம் ஏற்படுகிறது. எடுத்துக்காட்டாக மாமிச எலும்புகள், கரும்பு பட்டாணி போன்றவற்றை தொடர்ந்து சாப்பிடுவதால் பல் தேய்மானம் ஏற்பட்டு பல் கூச்சம் ஏற்படுகிறது.

சிலருக்கு மழைக்காலங்களில் மட்டும் பல் கூச்சம் ஏற்படும். இதற்கு காரணம் நமது வாயில் ஒரு குறிப்பிட்ட வெப்பநிலை தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும். மழைக் காலங்களில் இந்த வெப்ப நிலையில் மாற்றம் ஏற்பட்டு பல் கூச்சம் ஏற்படுகிறது.

பல் கூச்சத்திற்கான தீர்வுகள்:
முடிந்த வரையில் சொத்தைப் பற்கள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும். சொத்தைப் பற்கள் இருந்தால் அவற்றை மருத்துவரின் ஆலோசனையுடன் சொத்தைப் பற்களின் நிலையைப் பொறுத்து சொத்தைப் பற்களை அடைக்கவும் அல்லது பிடுங்கி விடவும். சுமார் மூன்று மாதம் காலத்திற்கு கடினமான உணவுப் பொருட்களை உண்பதை தவிர்த்து விடவும்.

மேலும் அதிக குளிர்ச்சியான அல்லது அதிக சூடான உணவுப் பொருட்களை தவிர்க்கவும். பற்களுக்கு பலத்தை சேர்க்கும் சத்தான கால்சியம் சத்துள்ள உணவுப் பொருட்களை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ளவும்.

எடுத்துக்காட்டாக, கால்சியம் அதிகம் உள்ள பொருட்களான பால், முட்டை, முருங்கை கீரை, கேழ்வரகு, சர்க்கரைவள்ளி கிழங்கு, சூரியகாந்தி விதைகள், கருப்பு எள் போன்ற உணவுப் பொருட்களை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் பல் கூச்சத்தை முற்றிலும் போக்க முடியும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Views: - 632

0

0