உங்களுக்கு ஆஸ்துமா பிரச்சினை இருக்கா… முந்திரிப் பழம் உங்களுக்காகவே படைக்கப்பட்டு இருக்கு!!!

Author: Hemalatha Ramkumar
25 April 2023, 5:52 pm
Quick Share

கோடைகாலங்களில் மட்டுமே அதிகமாக கிடைக்கக்கூடிய முந்திரி பழத்தின் நன்மைகளை இங்கே பார்ப்போம். முந்திரிப் பருப்பில் உள்ள சத்துக்களை விட முந்திரி பழத்தில் தான் அதிக சத்துக்கள் உள்ளது என்பது பலருக்கு தெரிவதில்லை. ஆரஞ்சு பழத்தை விட ஐந்து மடங்கு விட்டமின் சி சத்து இதில் அடங்கியுள்ளது.

மேலும் விட்டமின் பி1(தயாமின்), பி2(ரிப்போஃப்ளோவின்), பி3(நியாசின்), கால்சியம், நார்ச்சத்து, இரும்புசத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ், புரதம் மற்றும் அதிகப்படியான நீர்ச்சத்து ஆகியவை முந்திரி பழத்தில் அடங்கியுள்ளன. இந்தப் பழத்தை உண்ணும் போது தொண்டையில் ஒரு விதமான கரகரப்பை ஏற்படுத்துவதன் காரணமாக பலர் இதனை விரும்புவதில்லை.

இந்த தொண்டை கரகரப்பிற்கு காரணம் இதில் உள்ள அதிகமான கால்சியம் ஆகும். இந்த பழத்தின் நன்மைகளை இங்கே பார்ப்போம்:
அதிக உடல் எடை உள்ளவர்கள் காலையில் வெறும் வயிற்றில் முந்திரி பழத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் எரிக்கப்பட்டு உடல் எடை குறைக்கப்படுகிறது.

எலும்புகள் மற்றும் பற்களுக்கு அத்தியாவசியமான சத்துக்களான கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகிய சத்துக்கள் இந்த பழத்தில் இருப்பதால் எலும்புகள் மற்றும் பற்கள் மிகவும் வலுவடைகின்றன. எலும்பு தேய்மானம், மூட்டு வலி போன்றவற்றால் அவதிப்படுவோர் இந்த பழத்தை அதிகம் உண்ணலாம்.

இதில் அதிக அளவு நார்ச்சத்து அடங்கி இருக்கிறது. எனவே செரிமானத்தை அதிகமாக்கி மலச்சிக்கலை போக்குகிறது.
இதில் நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையான விட்டமின் சி அதிக அளவு இருக்கிறது. எனவே நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகரிக்கப்பட்டு, பாக்டீரியா மற்றும் வைரஸ் போன்றவற்றால் ஏற்படக்கூடிய சளி, காய்ச்சல், இருமல், மற்றும் எந்தவித நோய் தொற்றுகளும் நம்மை நெருங்காமல் பார்த்துக் கொள்கிறது.

வைட்டமின் சி இருப்பதால் சரும நோய்கள், தோல் வரட்சி போன்றவை தடுக்கப்படுகிறது.
இதயத்திற்கு நன்மை செய்யக்கூடிய ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் முந்திரி பழத்தில் இருப்பதால் இது இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதில் உள்ள பொட்டாசியம் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.

இதனால் மாரடைப்பு போன்ற நோய்கள் வராமல் தடுக்கிறது.
நமது உடலில் உள்ள அனைத்து உள்ளுறுப்புகளின் கழிவுகளையும் நீக்கக்கூடிய கல்லீரலை சுத்தம் செய்யக்கூடிய சக்தி இந்த பழத்திற்கு உள்ளது. இந்த பழத்தில் உள்ள அதிகப்படியான காரத்தன்மை கல்லீரலில் தேங்கியுள்ள நச்சுக்களையும் கழிவுகளையும் சுத்தம் செய்து வெளியேற்றுகிறது.

இதனால் கல்லீரல் சுத்தப்படுத்தப்பட்டு பலம் அடைகிறது.
நமது உடலில் ph அளவை சமநிலையில் வைத்துக்கொள்ள உதவுகிறது.
முந்திரி பழத்தில் உள்ள தனித்துவமான புளோனய்டுகள் நுரையீரல் சீராக செயல் பட்டு நுரையீரல் ஆரோக்கியமாக இருக்க உதவி செய்கிறது.

எனவே ஆஸ்துமா போன்ற நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் இருப்பவர்கள் இந்த பழத்தை அதிகம் உண்ணலாம். முந்திரி பழம் மேலும் பல நன்மைகளை தரக்கூடியது. எனினும் இந்த பழத்தை மிக அதிகமாக சாப்பிடுவதால் தொண்டையில் கரகரப்பு மற்றும் லேசான புண்களை ஏற்படுத்துகிறது. இந்த பழங்களை ஒரு ஐந்து நிமிடம் உப்பு தண்ணீரில் ஊற வைப்பதன் மூலம் இந்த கரகரப்பு தன்மையை குறைக்கலாம்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Views: - 448

0

0