வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க ஒரு ஈசியான வழி இருக்கு… வாங்க தெரிஞ்சுக்கலாம்!!!

Author: Hemalatha Ramkumar
22 May 2023, 12:46 pm
Quick Share

நாம் செய்யும் அன்றாட பணிகளால் நமது உடலானது அதிகப்படியான வெப்பமடைகிறது. இதனால் வாயு, பித்தம், கபம் போன்றவைகள் அதிகரித்து நமது உடலில் பல்வேறு நோய்கள் ஏற்பட காரணமாக அமைகின்றன. ஏனெனில் இந்த வாயு, பித்தம், கபம் ஆகிய மூன்றும் நமது உடலில் சீராக இல்லை எனில் அதுவே நமது உடலில் பல நோய்கள் வருவதற்கு காரணமாக அமைகிறது.

உதாரணமாக பித்தம் அதிகரிக்கும் போது மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் வருகிறது வாயு அதிகரிக்கும் போது அஜீரண கோளாறு வயிற்று வீக்கம் போன்றவை ஏற்படுகிறது கபம் அதிகரிக்கும் போது ஒற்றை தலைவலி மூக்கில் நீர் வடிதல் போன்றவை ஏற்படுகின்றன.

வாரத்தில் குறைந்தது ஒரு முறை எண்ணெய் தேய்த்து குளிப்பதால் நமது உடலில் உள்ள வெப்பம் தணிக்கப்படுகிறது.
எண்ணெய் தேய்த்து குளிப்பதால் நமது உடலில் உள்ள வெப்பம் குறைவதோடு மட்டுமல்லாமல் மேலும் பல நன்மைகள் ஏற்படுகின்றன.

உடலில் எண்ணெய் தேய்த்து விட்டு சிறிது நேரம் வெயிலில் இருப்பதால் நமது உடலுக்கு புரோ- வைட்டமின் டி என்ற சத்து கிடைக்கிறது. இது கால்சியத்தை உரிஞ்சுவதற்கு உதவுகிறது. கால்சியம் சத்து அதிகமாகும் போது நமது உடலில் உள்ள எலும்புகள் பலப்படுத்தப்படுகின்றன. மூட்டு வலி முதுகுத்தண்டு வலி போன்றவை இதனால் குணமாகின்றன.

உடல் சூட்டினால் சிலருக்கு இளம் வயதில் முடி உதிர்வு ஏற்பட்டு வழுக்கை தலையாக மாறக்கூடிய வாய்ப்பு உள்ளது. எண்ணெய் தேய்த்து குளிப்பதனால் உடல் குளிர்ச்சி அடைந்து இந்த பிரச்சனையில் இருந்து எளிதில் விடுபடலாம்.

பெண்களுக்கு ஏற்படும் ஏற்படக்கூடிய கருப்பை கட்டிகள் குணப்படுத்தப்படுகின்றன. தொடர்ந்து வாரம் ஒரு முறை அல்லது இருமுறை என ஆறு மாதம் எண்ணை தேய்த்து குளித்து வந்தால் கருப்பையில் இருக்கக்கூடிய நாள்பட்ட கருப்பை கட்டிகள் மெல்ல மெல்ல குணமடைந்து விடுகிறது.

மேலும் நமது உடலில் சருமத்தில் ஏற்படக்கூடிய சொறி, சிரங்கு, தேமல் போன்ற சரும வியாதிகளையும் ஏற்படாமல் தடுக்கிறது மற்றும் குணப்படுத்துகிறது.

எண்ணெய் தேய்த்து குளித்துவிட்டு குளிர்ச்சியான பொருட்களான கத்தாழை, இளநீர், வாழைத்தண்டு, தயிர் போன்ற உணவு பொருட்களை தவிர்ப்பது அவசியமாகும். ஏனெனில் இந்த உணவுப் பொருட்கள் நமது உடலை மேலும் குளிர்ச்சியடைய செய்து உடல் உபாதைகளை ஏற்படுத்தக் கூடும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Views: - 220

0

0