எண்ணெய் குளியல்: கோடை வெயிலை எப்படி சமாளிப்பது என திணறிக் கொண்டு இருப்பவர்களுக்கு!!!

Author: Hemalatha Ramkumar
14 April 2023, 10:26 am
Quick Share

கோடை காலம் வந்துவிட்டாலே உடல் சூடு பலருக்கு பெரும் பிரச்சனையாக இருக்கும். உடல் சூடு என்பது பலவிதமான நோய்களுக்கு வழிவகுக்கும். ஆகையால் உடல் சூட்டை குறைப்பதற்கு தேவையான வழிகளை பின்பற்றுதல் அவசியம். அந்த முறையில் உடல் சூட்டை குறைக்க வாரம் ஒரு முறையாவது எண்ணெய் தேய்த்து குளிப்பது அவசியம். உச்சி முதல் பாதம் வரை எண்ணெய் மசாஜ் செய்து குளிப்பது பலவிதமான பலன்களை தரும். சூரியனிலிருந்து கிடைக்கக்கூடிய வைட்டமின் டி ஊட்டச்சத்தினை உடலானது கிரகித்துக் கொள்ள நமது சருமத்தில் எண்ணெய் பசை இருப்பது மிகவும் அவசியம். எண்ணை குளியல் செய்வது உடலில் உள்ள ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். அதோடு மன அழுத்தம் குறையும். அடிக்கடி சிறுநீர் தொற்றுகளால் அவதிப்படுபவர்களுக்கு எண்ணெய் குளியல் நல்ல பலன் தரும்.

தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய் ஆகிய மூன்று எண்ணெய்களையும் சம அளவுகளில் எடுத்து கலந்து உச்சி முதல் பாதம் வரை நன்றாக தடவி மசாஜ் செய்ய வேண்டும். ஒரு மணி நேரம் ஊற விட்ட பிறகு சீயக்காய் மற்றும் நலங்கு மாவு கொண்டு உடலையும் தலைமுடியையும் நன்கு கழுவவும். வாரம் ஒரு முறை எண்ணெய் தேய்த்து குளிப்பது உடலில் உள்ள உஷ்ணத்தை சம அளவில் வைத்துக் கொள்ள உதவுகிறது.

எண்ணெய் தேய்த்து குளித்த பிறகு மனதிற்கு ஒரு புதிய உற்சாகம் கிடைக்கிறது. அதோடு எண்ணெய் தேய்த்து குளித்த கையோடு முடிந்தவரை வெளியில் செல்வதை தவிர்க்கவும். ஏனெனில் அவ்வாறு வெளியே செல்வது உடல் சூட்டை மேலும் அதிகரிக்க செய்து விடும்.

எண்ணெய் தேய்த்து குளிப்பது என்பது நமது பாரம்பரியத்தில் பல தலைமுறைகளாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஒரு முறையாகும். நமது முன்னோர்கள் வாரம் ஒருமுறை அல்லது இரு முறை எண்ணெய் தேய்த்து குளிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இதுவே அவர்கள் ஆரோக்கியத்தின் ரகசியமாகும். ஆனால் தற்போது தீபாவளி அன்று மட்டும் தான் பலர் எண்ணெய் தேய்த்து குளிக்கின்றனர். இந்த நிலை மாறி வாரம் ஒருமுறையாவது எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கத்தை கொண்டிருத்தல் அவசியம்.

எண்ணெய் தேய்த்து குளிப்பதால் பலவிதமான நன்மைகள் கிடைக்கும் என்பது அறிவியல் பூர்வமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. உடல் வலி, சோர்வு, உடல் சூடு போன்றவை எண்ணெய் குளியல் எடுப்பதால் குணமாகும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. அதோடு எண்ணெய் குளியல் எடுத்த பிறகு வெயிலில் சில நிமிடங்கள் செலவிடுவது செரோடோனின் என்ற மகிழ்ச்சி ஹார்மோன் அளவை அதிகரிக்க உதவும் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Views: - 349

0

0