உங்களுக்கு முலாம்பழம் என்ன தான் ரொம்ப பிடிக்கும் என்றாலும் கூட இந்த நேரத்துல அத சாப்பிடாதீங்க!!!

Author: Hemalatha Ramkumar
13 April 2023, 6:42 pm
Quick Share

கோடை காலத்தில் நம் உடலை குளிர்விக்கும் விதமாக பலவிதமான பழங்கள் கடைகளில் விற்கப்படும். அவற்றில் ஒன்றுதான் முலாம் பலம். இந்த முலாம் பலம் பார்ப்பதற்கு வெள்ளரிப்பழம் போலவே இருக்கும். இந்த பழத்தில் ஏராளமான வைட்டமின்கள், ஆன்டி ஆக்சிடன்டுகள் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ளன. குறிப்பாக இந்த முலாம் பழத்தில் நீர்ச்சத்து அதிகமாக உள்ளது. கோடை காலத்தில் முலாம் பழத்தை சாப்பிட்டு வந்தால் பல விதமான கோடைகால பிரச்சனைகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.

முலாம்பழம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும் இதில் பொட்டாசியம் இருப்பதன் காரணமாக ரத்த அழுத்தத்தை சரியான அளவில் வைக்க உதவுகிறது. ஆனால் இத்தகைய ஆரோக்கியமான முலாம் பழத்தை அதிகமாக சாப்பிடும்போது நம் உடலுக்கு கேடு தான் விளைவிக்கும்.

நீரழிவு நோயாளிகள் முலாம் பழத்தை குறைவான அளவில் சாப்பிட வேண்டும். ஏனெனில் இந்த பழமானது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை அதிகரிக்கக்கூடும். ஒரு சில உணவு கலவைகளானது நம் செரிமான மண்டலத்தில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். அது பலவிதமான செரிமான பிரச்சனைகளை உண்டாக்கிவிடும். அந்த வகையில் முலாம் பழத்தை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பது நல்லதல்ல.

ஏனெனில் இது செரிமான ஆரோக்கியத்தை பாதிக்கும். நுண்ணுயிரிகள் மற்றும் பாக்டீரியாக்கள் வளர்ச்சி அடையவும் பெருக்கம் அடையவும் தேவையான நீர் மற்றும் சர்க்கரை மூலம் பழத்தில் அதிக அளவில் காணப்படுகிறது எனவே முலாம் பழத்தை நாம் சாப்பிட்ட பிறகு நீரை குடிக்கும் பொழுது நாம் வயிற்றில் காணப்படும் நுண்ணுயிரிகள் பெருக்கம் அடைவதுடன் வயிறு முழுவதும் பரவி அவை வயிற்றுப்போக்கை உண்டாக்கிவிடும். ஆகையால் முலாம் பழத்தை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பதை தவிர்த்து விடுங்கள் அதோடு முலாம் பழத்தை அளவோடு சாப்பிடுவதால் அதில் உள்ள பலன்கள் அனைத்தையும் நாம் பெறலாம்.

மேலும் முலாம் பழத்தை மாலை மற்றும் இரவு நேரங்களில் சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள். ஏனெனில் முலாம் பழத்தில் காணக்கூடிய எளிய சர்க்கரையை மாலை நேரத்தில் ஜீரணிக்க நமது உடலானது சிரமப்படும். பொதுவாகவே நமது செரிமான மண்டலம் இரவு நேரங்களில் மெதுவாக செயல்படும். ஆகையால் இந்த நேரத்தில் நாம் சர்க்கரை கலந்து உணவுகளை சாப்பிடும் பொழுது அதற்கு மிகவும் பாரமாகி விடுகிறது. இதனால் தூக்கமின்மை, உடல் பருமன் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Views: - 304

0

0