பழங்களில் உப்பு, மசாலா சேர்த்து சாப்பிடுவது உங்களுக்கு ரொம்ப பிடிக்குமா… இந்த செய்தி உங்களுக்கு தான்!!!

Author: Hemalatha Ramkumar
13 April 2023, 5:05 pm
Quick Share

நம் உடலை குளிர்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள உதவும் பழங்களை பொதுவாக கோடை காலங்களில் நாம் சற்று அதிகப்படியாகவே எடுத்துக் கொள்கிறோம். அத்தகைய பழங்களை உப்பு, மிளகாய்த்தூள், சாட் மசாலா போன்றவற்றை தூவி கடைகளில் விற்றால் இன்னும் ஆவலோடு வாங்கி சாப்பிடுகிறோம்.

ஒரு சிலர் வீடுகளில் பழங்கள் சாப்பிடும் பொழுது கூட உப்பு, மிளகாய்த்தூள் தொட்டு தான் சாப்பிடுவார்கள். இவ்வாறு சாப்பிடுவது சுமையை கூட்டுவதால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதையே பழக்கத்தை பின்பற்றுகின்றனர் ஆனால் உண்மையில் பழங்களோடு மசாலா சேர்த்து சாப்பிடுவது உடலுக்கு நல்லதா? இவ்வாறு சாப்பிடுவதால் பழங்களில் இருந்து நமக்கு ஊட்டச்சத்துக்களை கிடைக்குமா?

பொதுவாக பழங்களை வெட்டி அவற்றின் மீது உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்க்கும் பொழுது அவற்றிலிருந்து நீர் வெளியாவதை நீங்கள் பார்த்திருக்கலாம். ஆனால் இந்த நீர் ஏன் வெளியாகிறது என்று என்றைக்காவது யோசித்து இருக்கிறீர்களா? ஏனென்றால் இவ்வாறு செய்வது பழங்களில் உள்ள நீர்ச்சத்தை வெளியேற்றுகிறது. அதுமட்டுமில்லாமல் உப்பு மற்றும் சாட் மசாலாவில் காணப்படக்கூடிய சோடியம் நமது உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியது. மேலும் சர்க்கரை அல்லது உப்பு சேர்த்து சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளது.

பழங்களை வெட்டி அப்படியே சாப்பிடுவது உடலுக்கு நன்மை பயக்கும். அவ்வாறு செய்யாமல் உப்பு, மசாலா, சர்க்கரை போன்றவற்றை சேர்த்து சாப்பிடுவது அவற்றின் கலோரி எண்ணிக்கையை அதிகரிக்கிறது. இதனால் உடல் எடை அதிகரிக்கும். பழங்களில் உப்பு சேர்க்கும் பொழுது அதில் காணப்படும் சோடியம் உடலில் உள்ள தண்ணீரை தக்க வைக்கிறது. இதனால் சிறுநீரின் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். மேலும் இதன் காரணமாக வயிற்றில் வீக்கம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

பொதுவாக கோடை காலங்களில் பழங்களை சாப்பிடும் பொழுது அதில் ஏலக்காய் மற்றும் மிளகுத்தூள் பயன்படுத்தி சாப்பிட வேண்டும். அதேபோல குளிர் காலத்தில் இலவங்கப்பட்டை மற்றும் கிராம்புத்தூள் சேர்த்து பழங்களை சாப்பிட வேண்டும் என்று ஆயுர்வேதம் அறிவுறுத்துகிறது. எனினும் பழங்களை வாங்கி அப்படியே சாப்பிடுவது சுவையையும் ஆரோக்கியத்தையும் நமக்கு அள்ளித்தரும் என்பதை மறந்து விடாதீர்கள்!

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Views: - 252

0

0