சாப்பிட்ட உடனேயே மலம் கழிக்க வேண்டும் போல இருக்கா… நீங்க ஃபாலோ பண்ண வேண்டியது இது தான்!!!

Author: Hemalatha Ramkumar
13 April 2023, 10:21 am
Quick Share

ஒரு சிலருக்கு உணவு சாப்பிட்ட உடனேயே மலம் கழிக்க வேண்டும் போன்ற உணர்வு ஏற்படும். இது இரிட்டபுள் பவள் சின்ட்ரோம் (Irritable Bowel Syndrome) என்று அழைக்கப்படுகிறது. உலகத்தில் உள்ள 10% மக்களுக்கு இந்த நோய் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடுமையான முதல் மிதமான வயிற்றுப்போக்கு வரை ஏற்படலாம். அதிலும் குறிப்பாக ஒரு சில உணவுகளை சாப்பிட்ட உடனேயே வயிற்றுப்போக்கு ஏற்படும்.

இந்த நோயை குணமாக்கும் மருந்து எதுவும் கிடையாது. ஆனால் ஒரு சில உணவுகளை சாப்பிடுவதன் மூலமாகவும், ஒரு சில வாழ்க்கை முறை மாற்றங்களை செய்வதன் மூலமாகவும் இந்த நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்தலாம்.

அந்த வகையில் இந்த பிரச்சனையால் அவதிப்பட்டு வருபவர்கள் நார்ச்சத்து நிறைந்த காய்கறி மற்றும் பழங்களை அதிக அளவில் சாப்பிட கூடாது. அதேபோல காரம் நிறைந்த உணவுகளை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். மேலும் தயிர், வெண்ணெய், பால் போன்ற பால் சார்ந்த பொருட்களை சாப்பிடுவது வயிற்றுப் போக்கு ஏற்படுவதை அதிகரிக்கும் என்பதை ஒருவர் மனதில் கொள்ள வேண்டும்.

அடுத்தபடியாக பேரிக்காய், மாம்பழம், ஆப்பிள், தர்பூசணி போன்ற பழங்களையும் ஒருவர் தவிர்ப்பது நல்லது. திராட்சைப்பழம், பீன்ஸ், கேரட், ஆரஞ்சு, ப்ளூபெர்ரி போன்ற காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடுவது நல்ல பலன் தரும். இறைச்சி வகைகள், முட்டை போன்றவற்றை தாராளமாக சாப்பிடலாம். அதே சமயம் எல்லா வகையான கீரைகளையும் சாப்பிடலாம். ஆகவே, உண்ணும் உணவை கவனமாக தேர்ந்தெடுத்து சாப்பிடுவதன் மூலமாக வயிற்றுப்போக்கு ஏற்படுவதை ஒருவர் கட்டுப்படுத்த முடியும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Views: - 240

0

0