குடல் புழுக்களில் தொடங்கி TB நோய் வரை குணப்படுத்தும் பூண்டு நீர்!!!

Author: Hemalatha Ramkumar
19 May 2023, 7:32 pm
Quick Share

பூண்டு வைட்டமின்கள் B6 மற்றும் C, மாங்கனீஸ் மற்றும் செலினியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவு பொருள் ஆகும். இதில் ஏராளமான ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் உள்ளன. பூண்டை நீருடன் சேர்த்து கொதிக்க வைப்பதன் மூலம் கிடைக்கும் பூண்டு நீரில் ஏராளமான பயன்கள் உள்ளன. அவற்றில் சில பயன்களை இங்கே பார்ப்போம்.

இது நமது உடலின் உள்ள இரத்தத்தை சுத்தம் செய்கிறது. அதாவது இரத்தத்தில் உள்ள நச்சுக் கழிவுகளை வெளியேற்றுவதில் கல்லீரலுக்கு துணை புரிகிறது. நமது உடலில் LDL எனும் கெட்ட கொழுப்புகள் அதிகமாக இருந்தால் அது இதய நோய்களுக்கு மற்றும் ரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும்.

அத்தகைய LDL கெட்ட கொழுப்புகளை கரைக்கிறது. சிறு குழந்தைகளுக்கு வயிற்றில் இருக்கக்கூடிய குடல் புழுக்களை இந்த நீரானது அழிக்கக் கூடியது.
உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்க நினைப்பவர்கள் இந்த பூண்டு நீரை காலையில் வெறும் வயிற்றில் மூன்று மாதங்களுக்கு தொடர்ந்து அருந்தி வருவதால் நல்ல பலன் கிடைக்கும்.

அசிடிட்டி போன்ற வயிற்றுப் பிரச்சினைகள் உள்ளவர்கள் உணவு அருந்திய பிறகு ஒரு மணி நேரம் கழித்து பூண்டு நீரை நீரை அருந்தலாம். உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இந்த பூண்டு நீரானது மிகச் சிறந்த மருந்தாகும்.

இது இரத்த அழுத்தத்தை ஒரே சீராக வைக்கும் சக்தி கொண்டது. மாரடைப்பு போன்ற இதய நோய்கள் உள்ளவர்கள் இந்த நீரை தினமும் அருந்தலாம். இதனால் இரத்த நாளங்களில் படிந்து உள்ள கொழுப்புகள் கரைக்கப்பட்டு இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டம் நன்கு சீராக்க வைக்கப்படுகிறது.

மேலும் இதய தசைகளை நன்கு பலப்படுத்துகிறது.
காசநோய் (TB) உள்ள நோயாளிகள் இந்த நீரை தொடர்ந்து அருந்துவதால் அவர்களுக்கு பல நன்மைகள் ஏற்படுகின்றன. இது அவர்களுக்கு மிகச்சிறந்த மருந்தாக அமைகிறது. நுரையீரலில் படிந்திருக்கும் நாள்பட்ட சளியானது சிறிது சிறிதாக கரைக்கப்பட்டு நுரையீரல் பலப்படுத்தப்படுகிறது.

நுரையீரலுக்கு செல்லும் ரத்தக் குழாய்களை சுத்தம் செய்து நுரையீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது. சுவாசக் குழாய்களை விரிவடைய செய்து சுவாசத்தை எளிதாக்குகிறது.

உடலில் தோன்றும் புற்றுநோய் செல்களை அழிக்கக்கூடிய வேதிப்பொருள்கள் பூண்டில் அதிகமாக உள்ளது. பூண்டு நீரானது இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்துகிறது. எனவே சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த நீரை தினமும் குடிக்கலாம். இதனால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படுகிறது.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Views: - 291

0

0