என்ன பண்ணாலும் குறையாத தொப்பை கூட இத தினமும் சாப்பிட்டு வந்தா கொஞ்சம் கொஞ்சமா கரைஞ்சுடும்!!!

Author: Hemalatha Ramkumar
19 May 2023, 5:52 pm
Quick Share

நீண்ட காலமாக நாம் பயன்படுத்தி வரும் ஒரு மூலிகைப் பொருள் ஏலக்காய். ஏலக்காய் ஒரு சிறந்த வாசனை பொருள் மட்டுமல்லாமல் நம் உடலுக்கு பல நன்மைகளை தரும் மூலிகை பொருளாகவும் விளங்குகிறது. இது சித்த மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

சிறிய அளவிலான ஏலக்காயில் புரதச்சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம், வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம், இரும்புச்சத்து மற்றும் சோடியம் ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளன. தினமும் ஒரு ஏலக்காயை மென்று சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் நன்மைகளைப் பற்றி இப்போது பார்ப்போம்.

ஏலக்காய் மென்று சாப்பிடுவதால் நமது உடலில் மெட்டபாலிசம் அதிகரிக்கிறது. மேலும் செரிமான உறுப்புகள் பலம் பெறுகின்றன. ஜீரண நீரை அதிகம் சுரக்க செய்து நாம் உண்ணும் உணவுகளை எளிதில் செரிமானமாகச் செய்கிறது.

பசியின்மையால் அவதிப்படுவோர் தினமும் ஒரு ஏலக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நன்கு பசி எடுக்கும்.
நெஞ்சு சளியை உருவாக்கும் பாக்டீரியா மற்றும் வைரஸ்களை அழிக்கிறது.

ஏலக்காய் நுரையீரலில் நீண்ட நாட்களாக இருக்கும் சளியை சிறிது சிறிதாக கரைக்கிறது. இருமலை குறைக்கிறது. ஏலக்காய் நல்ல வாசனை உடையது என்பதால், இது வாய் துர்நாற்றத்தை போக்குகிறது.

குடல் புண் அல்சர் காரணமாக சிலருக்கு வாய் துர்நாற்றம் இருக்கும். அவர்கள் தினமும் ஒரு ஏலக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் குடல் புண் சிறிது சிறிதாக குணமடையச் செய்து வாய் துர்நாற்றத்தை வாய் போக்குகிறது.

ஏலக்காய் நமது உடல் புத்துணர்ச்சி அடைய உதவுகிறது.
நமது உடலில் உள்ள நச்சுக் கழிவுகள் நமது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கக் கூடியது ஆகும். இந்த நச்சுக் கழிவுகளை நமது உடலில் இருந்து வெளியேற்றி உடல் நலத்தை பாதுகாக்கிறது.

ஏலக்காய் வாய் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. வாய்ப்புண், பல் ஈறுகளில் வீக்கம் போன்ற பிரச்சனைகளை சரி செய்கிறது. வெயில் காரணமாக வாந்தி, மயக்கம், தலைசுற்றல் போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள் ஏலக்காயை மென்று சாப்பிடுவதால், சிறிது நேரத்தில் சரியாகிவிடும்.

ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு ஏலக்காய் ஒரு நல்ல மருந்தாகும். ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் மூச்சு விடுவதில் அதிக சிரமத்தை உணர்வார்கள். தினமும் ஒரு ஏலக்காயை மென்று சாப்பிட்டு வருவதால் சுவாசக் குழாய் விரிவடைந்து சுவாசம் சீராகிகிறது.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Views: - 485

0

0