வெயிலில் காய்கறிகள் மற்றும் பழங்கள் விரைவில் வதங்கி போகாமல் இருக்க என்ன செய்யலாம்???

Author: Hemalatha Ramkumar
19 May 2023, 3:48 pm
Quick Share

கோடைகால வெப்பம் நமக்கு மட்டுமல்ல, நமது சமையலறையில் உள்ள காய்கறிகளுக்கும் மோசமானது. அதிக வெப்பநிலையானது பழங்கள் மற்றும் காய்கறிகளின் பழுக்க வைக்கும் செயல்முறையை விரைவுபடுத்துகிறது. இதனால் அவை விரைவாக கெட்டுவிடும். மேலும் கோடை வெப்பம் காரணமாக பழங்கள் மற்றும் காய்கறிகளில் உள்ள ஊட்டச்சத்து குறையலாம். முக்கியமாக காய்கறிகளை குளிர்ச்சியாக வைத்து அவற்றை முறையாக சேமித்து வைக்க வேண்டும். காய்கறிகள் மற்றும் பழங்கள் விரைவில் கெடாமல் இருக்க அவற்றை எப்படி சேமிக்க வேண்டும் என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.

வெங்காயம், உருளைக்கிழங்கு, பூண்டு மற்றும் தக்காளி போன்ற காய்கறிகளை குளிர்சாதன பெட்டியில் வைக்க வேண்டாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது. அவை நேரடி சூரிய ஒளியில் இருந்து விலக்கி குளிர்ந்த, உலர்ந்த இடத்தில் சேமிக்கப்பட வேண்டும்.

மாம்பழம், வாழைப்பழம், வெண்ணெய்பழம், கிவி, பேரிக்காய், பிளம்ஸ், தக்காளி பழுக்கும் போது எத்திலீன் வாயு வெளியேறுகிறது. எத்திலீன் ஆப்பிள், ப்ரோக்கோலி, கேரட், தர்பூசணி மற்றும் இலை கீரைகள் போன்ற உணவுப் பொருட்களை முன்கூட்டியே முதிர்ச்சியடையச் செய்யும் திறன் கொண்டது. இவைகளை ஒன்றாகச் சேமித்து வைக்காதீர்கள். ஏனெனில் இது பழுக்க வைக்கும் செயல்முறையை துரிதப்படுத்தும்.

பெர்ரி மற்றும் திராட்சை போன்ற பழங்களை சாப்பிடுவதற்கு முன்பு கழுவினால் போதும். அவற்றை முன்னரே கழுவி வைக்க கூடாது.

வேர்கள் மற்றும் கிழங்கு காய்கறிகளை நீண்ட காலத்திற்கு வைத்திருக்க விரும்பினால் அவற்றை ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு குளிரூட்டவும் அல்லது குறுகிய காலத்திற்கு வைக்க வேண்டுமானால் காற்றோட்டமாக வெளியே வைக்கவும்.

வெங்காயம் மற்றும் பூண்டை குளிர்சாதன பெட்டியில் வைக்க வேண்டாம். குறைந்த ஈரப்பதத்துடன் கூடிய குளிர்ந்த, இருண்ட இடத்தில் வைக்கவும். உருளைக்கிழங்கு மற்றும் சர்க்கரை வள்ளிக்கிழங்குகளிலிருந்து தனியாக வைக்கவும்.

முட்டைக்கோஸ் போன்ற சிலுவை காய்கறிகளின் மேல் பகுதிகளை வெட்டாமல் காற்று உள்ளே செல்லாத டப்பாவில் வைத்து குளிரூட்டவும்.

கோடையில் அதிக அளவில் காய்கறிகளை வாங்குவதைத் தவிர்க்கவும். ஒவ்வொரு வார இறுதியிலும் ஷாப்பிங் செய்யலாம் அல்லது பொருட்கள் காலியானவுடன் அவற்றை வாங்கலாம்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Views: - 525

0

0