தினமும் காலையில் இதை குடித்து வந்தால் சிறுநீர் எரிச்சல் பிரச்சினை வரவே வராது!!!

Author: Hemalatha Ramkumar
19 May 2023, 10:38 am
Quick Share

பொதுவாக அந்தந்த பருவத்தில் கிடைக்க கூடிய பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட்டு வந்தாலே எந்த ஒரு நோயிலிருந்தும் நம்மை காத்துக் கொள்ளலாம். அந்த வகையில் கோடை காலத்தில் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள சுரைக்காய் பெருமளவு உதவக்கூடியது. நம் அன்றாட உணவுகளில் சேர்க்கக்கூடிய ஆரோக்கியமான காய்கறிகளில் சுரைக்காய் ஒன்று. சுரைக்காயை ஜூஸாக தயாரித்து குடிப்பது நமக்கு பல வழிகளில் நன்மைகளைத் தரும். சுரைக்காய் சாற்றை காலை வேலையில் பருக வேண்டும். சுரக்காய் ஜூஸை பொறுத்தவரை அதனை செய்த பின் உடனடியாக பருகி விடுவது நல்லது. இப்பொழுது சுரைக்காய் சாறு குடிப்பதால் கிடைக்கும் பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

சுரைக்காய் சாறு உடலில் குளிர்ச்சியான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது. உடலில் உள்ள நீர்ச்சத்து இழப்பை ஈடு செய்து உடலை குளிர்விக்க ஏற்றது. கோடை மாதங்களில் ஏற்படும் டிஹைடிரேஷனை தடுக்க சுரைக்காய் சாறு சிறந்த சாய்ஸ்.

சுரைக்காய் சாற்றில் குறைந்த கலோரிகள் மற்றும் குறைந்த அளவு கொழுப்புகள் காணப்படுவதால் இது உடல் எடையை குறைப்பதற்கு ஏற்றது. உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி உடலுக்கு தேவையான நீச்சத்தை அளிக்கிறது. மேலும் உடலில் உள்ள கொழுப்பு அளவை குறைப்பதன் மூலமாக உடல் எடையை குறைக்க உதவுகிறது.

சுரைக்காய் சாறு வயிற்றில் உள்ள பிரச்சனைகளை சரி செய்து, மலச்சிக்கலை தடுக்க உதவுகிறது. மேலும் செரிமானத்தை ஊக்குவிக்கிறது

நீரிழிவு நோயாளிகள் சுரைக்காய் சாற்றைப் பருகுவது கணையத்தின் செயல்பாட்டை மேம்படுத்துவதாக ஒரு சில ஆய்வுகள் கூறுகின்றன. இதன் காரணமாக ரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதை தடுக்கிறது. மேலும் நீரழிவு நோய் காரணமாக ஏற்படும் இதய பிரச்சினைகளையும் தடுக்க உதவுகிறது.

சுரைக்காய் சாற்றில் வைட்டமின் சி போன்ற ஆன்டிஆக்சிடன்டுகள் அதிக அளவில் காணப்படுகிறது. இது சருமத்தின் வயதான அறிகுறிகளை தடுப்பதில் சிறந்தது. அதோடு வைட்டமின் சி சருமத்தின் கொலாஜன் அளவுகளை அதிகரிக்கவும், சருமத்தின் இளமையான தோற்றத்தை பராமரிக்கவும் உதவுகிறது.

கோடை காலத்தில் பலர் அனுபவிக்கும் ஒரு பொதுவான பிரச்சனை சிறுநீர் எரிச்சல் ஆகும். சுரைக்காய் சாரானது நச்சுக்களை வெளியேற்றி தொற்றுகளில் இருந்து நம்மை காப்பதன் மூலமாக சிறுநீர் எரிச்சலை குறைக்க உதவுகிறது. சிறுநீர எரிச்சல் இருப்பவர்கள் சுரைக்காய் சாற்றை தொடர்ந்து குடித்து வர நல்ல பலன் கிடைக்கும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Views: - 277

0

0