இந்த பிரச்சினைகள் இருந்தால் கேழ்வரகு சாப்பிடும் போது நீங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்!!!

Author: Hemalatha Ramkumar
17 January 2023, 10:07 am
Quick Share

சிறுதானிய வகைகளில் ஒன்றான ராகி ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. தூங்குவதில் சிக்கல், பதற்றம், உடல் பருமன் மற்றும் இரத்த சோகை போன்ற பிரச்சினைகளுக்கு ராகி போன்ற உணவு மருந்தாக செயல்படுகிறது.

கேழ்வரகு இரும்புச்சத்தின் ஆதாரமாக இருப்பதால், இது உடல் வலிமையை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது. அரிசியைக் காட்டிலும் கேழ்வரகில் குறைந்த அளவு நார்ச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட் காணப்படுகிறது. இதன் காரணமாக இது குறைந்த கிளைசீமிக் குறியீடு கொண்ட உணவாக திகழ்கிறது. ஆகவே நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றதாக கேழ்வரகு அமைகிறது.

சிறுகுடல் பிரச்சினைகள் உள்ளவர்கள் கேழ்வரகை அதிகமாக சாப்பிடக்கூடாது. ஏனெனில், அது வாயு, வீக்கம், மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு பிரச்சினைக்கு வழிவகுக்கும்.

சிறுநீரகத்தில் பிரச்சினை இருப்பவர்களுக்கும் கேழ்வரகு தீங்கு விளைவிக்கும். கேழ்வரகை அதிக அளவில் சாப்பிடுவது ஆக்சாலிக் அமிலத்தை உருவாக்கும். ஆகவே சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீரக தொற்று போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள் கேழ்வரகை அதிகம் சாப்பிடக்கூடாது.

ஹைப்பர் தைராய்டிசம் மற்றும் ஹைப்போ தைராய்டிசம் ஆகிய இரண்டு வகையான தைராய்டு பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு கேழ்வரகு ஆகாது. கேழ்வரகு உடலில் குளிர்ச்சியை ஏற்படுத்தும் என்பதால், இதனை குளிர் காலத்தில் சாப்பிடுவது நல்லதல்ல.

கேழ்வரகு எளிதில் ஜீரணமாகாது என்பதால் இதனை அதிக அளவில் சாப்பிடுவது மலச்சிக்கல், வாயு, வயிற்றுப்போக்கு, வீக்கம் போன்ற செரிமான சிக்கல்களை ஏற்படுத்தும். எனவே, நீங்கள் அடுத்த முறை கேழ்வரகு சாப்பிடும் போது கவனமாக இருக்கவும்.

Views: - 346

0

0