லெமன் ஜூஸ் அதிகமா குடிச்சா என்னென்ன பிரச்சினை வரும் பாருங்க!!!

Author: Hemalatha Ramkumar
22 April 2023, 6:41 pm
Quick Share

எலுமிச்சை ஜூஸ் அதன் எக்கச்சக்கமான ஆரோக்கிய நலன்களுக்காகப் பாராட்டப்படுகிறது. நீரிழப்பைத் தடுப்பது, எடை இழப்பை ஊக்குவிப்பது மற்றும் செரிமானத்திற்கு உதவுவது வரை எலுமிச்சை சாற்றில் ஏராளமான பலன்கள் உண்டு.

வாழ்க்கையில் பெரும்பாலான விஷயங்களைப் போலவே, அது நல்லதாகவே இருந்தாலும் எந்த ஒரு விஷயமும் அளவுக்கு அதிகமானால் நஞ்சாகி விடும். எலுமிச்சை ஜூஸ் அதிகமாக குடிப்பதால் ஏற்படும் சில விளைவுகள் பின்வருமாறு.

எலுமிச்சையில் வைட்டமின் சி அதிகமாக இருப்பதால், எலுமிச்சை சாறு அமிலத்தன்மை கொண்டதாக இருக்கும். இது காலப்போக்கில் பல் பற்சிப்பி அரிப்பை ஏற்படுத்தும். எலுமிச்சம்பழ ஜூஸில் நாம் சர்க்கரை சேர்த்து சாப்பிடும்போது அதனால் பல் சிதைவு அபாயமும் அதிகரிக்கிறது.

எலுமிச்சம்பழ நீரை ஸ்ட்ரா மூலம் குடிப்பது பற்களை சேதத்தில் இருந்து பாதுகாக்கும். எலுமிச்சை நீரை குடித்த உடனேயே பல் துலக்குவதைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்படுகிறது.

எலுமிச்சை தண்ணீரை அதிகமாக உட்கொண்ட பிறகு ஒரு சிலருக்கு ஒற்றைத் தலைவலி ஏற்படலாம். இந்த சிட்ரஸ் பழத்தில் உள்ள டைரமைன் என்ற கூறுதான் இதற்குக் காரணம். டைரமைன் ஒற்றைத் தலைவலியை அதிகரிக்கிறது.

அதிக அளவு எலுமிச்சை ஜூஸ் குடிப்பது வயிற்றில் எரியும் உணர்வை ஏற்படுத்தும். இது இரைப்பை குடல் அறிகுறிகளை அதிகரிக்கலாம்.
எலுமிச்சை, ஒரு அமில உணவாக இருப்பதால், GERD மற்றும் அமில ரிஃப்ளக்ஸ் தூண்டலாம். இதன் விளைவாக நெஞ்செரிச்சல், குமட்டல் மற்றும் வாந்தி ஏற்படும்.

எலுமிச்சை ஜூஸ் அதிகமாக பருகுவது அடிக்கடி சிறுநீர் கழிக்க வழிவகுக்கும். இதற்கு அதன் டையூரிடிக் பண்புகள் காரணமாகும். எலுமிச்சம்பழம் ஜூஸ் அதிகம் குடித்தால் வயிறு உபாதைகள் ஏற்படும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Views: - 219

0

0