நோய் தீர்க்கும் வெள்ளை வெங்காயம்!!!

Author: Hemalatha Ramkumar
22 June 2023, 6:43 pm
Quick Share

வெங்காயத்தை நமது சமையலில் பயன்படுத்தாத நாளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு வெங்காயம் நம் உணவுக்கு மிகவும் நெருக்கமான ஒரு காய்கறி ஆகும். இந்தியாவில் வெங்காயத்தின் நுகர்வு அதிகமாக இருக்க இதுவே காரணம். வெங்காயம் உணவின் சுவையை கூட்டுவது மட்டுமல்லாமல், நமது ஆரோக்கியத்திற்கும் ஏராளமான பயன்களை தருகிறது.

வெங்காயம் பலவிதமான தீவிர நோய்களிலிருந்து நம் உடலை பாதுகாக்கிறது. வெள்ளை நிற தோலுடைய வெங்காயத்தை நீங்கள் பயன்படுத்தி இருக்கிறீர்களா?
வழக்கமாக நமக்கு கிடைக்கும் வெங்காயத்தை விட வெள்ளை வெங்காயம் குறைவாகவே உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் காரணமாக இது மார்க்கெட்டுகளில் குறைவாக கிடைக்கிறது. எனினும் வெள்ளை வெங்காயத்தின் மருத்துவ பயன்கள் பொறுத்தவரை ஏராளமாகவே உள்ளது. இந்த வெள்ளை வெங்காயத்தின் பயன்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

வெள்ளை வெங்காயம் சர்க்கரை நோயால் அவதிப்படுபவர்களுக்கு அற்புதமான ஒரு மருந்தாகும். இந்த வெங்காயத்தை வழக்கமாக உணவில் சேர்த்து வந்தால் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப்படும். ஆரம்ப நிலையில் புற்றுநோயை தடுக்கும் பண்புகள் வெள்ளை வெங்காயத்தில் உள்ளது. இதில் உள்ள ஃபிளவானாய்டு மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடுகிறது. இதற்கு வெள்ளை வெங்காயத்தை பச்சையாகவோ அல்லது சமைத்தோ சாப்பிடலாம்.

செரிமான பிரச்சனை இருப்பவர்கள் வெள்ளை வெங்காயத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் செரிமானத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஏனெனில் வெள்ளை வெங்காயத்தில் அதிக அளவு நார்ச்சத்து மற்றும் ஃப்ரீ பயாடிக்குகள் உள்ளன. இது வயிற்றில் இருக்கக்கூடிய செரிமான பாக்டீரியாவை அதிகரிக்கிறது. இதனால் செரிமானம் மேம்படுகிறது.

நமக்கு நல்ல நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால் தான் நோய்களிலிருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளலாம். வெள்ளை வெங்காயம் சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். ஆகவே தினமும் உங்கள் உணவில் வெள்ளை வெங்காயம் சேர்த்துக் கொள்ள மறக்காதீர்கள்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Views: - 414

0

0