சளி இயற்கையாக கரைய வெற்றிலையை இந்த மாதிரி பயன்படுத்தி பாருங்க!!!

Author: Hemalatha Ramkumar
12 June 2023, 3:16 pm
Quick Share

வயதான பாட்டிக்களும் தாத்தாக்களும் வெற்றிலை பாக்கு மென்று கொண்டே இருப்பதை நிச்சயமாக நாம் பார்த்திருப்போம். வெற்றிலை பல மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு மூலிகை. வெற்றிலை சாப்பிட்டால் பசி அதிகரிக்கும். அஜீரண பிரச்சனை சரியாக, கோழை இளக, வயிற்று கோளாறுகள் குணமாக வெற்றிலையை நாம் பயன்படுத்தலாம்.

மேலும் ஆஸ்துமா, மூச்சுக் குழலில் ஏற்படும் அலர்ஜி, இருமல் சளி போன்ற நுரையீரல் சார்ந்த பிரச்சனைகள் மற்றும் அல்சர் ஆகியவற்றை குணப்படுத்தக்கூடிய மருத்துவ குணங்கள் வெற்றிலையில் உள்ளது. வெற்றிலையை பாக்குடன் சாப்பிட்டு வரும் பொழுது பல்வேறு விதமான நோய்கள் குணமாகிறது. இந்த பதிவில் வெற்றிலையை எவ்வாறு சாப்பிட்டால் என்னென்ன மாதிரியான நோய்கள் குணமாகும் என்பதைப் பற்றி பார்க்கலாம்.

*வெற்றிலையோடு குறைந்த அளவு பாக்கு மற்றும் அதிக சுண்ணாம்பு சேர்த்து சாப்பிடும் பொழுது பசி அதிகரிக்கும். உணவு சாப்பிட வேண்டும் என்ற உணர்வை வெற்றிலை தூண்டும்.

*வயிற்றில் புண், வாயில் துர்நாற்றம் வீசுவது, வாய்ப்புண் போன்ற பிரச்சனைகளினால் அவதிப்படுபவர்கள் மாலை நேரத்தில் சிறிய அளவு, பாக்கு மற்றும் சுண்ணாம்பு ஆகியவற்றை வெற்றிலையில் வைத்து மென்று வர இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம்.

*ஒரு வெற்றிலையை எடுத்து அதில் 5 முதல் 6 துளசி இலைகளை உள்வைத்து கையை வைத்து கசக்கும் பொழுது கிடைக்கும் சாற்றினை குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் சளி மற்றும் இருமலுக்கு தீர்வு கிடைக்கும்.

*எப்பொழுதும் வெற்றிலையில் உள்ள அதன் காம்பு, நுனி மற்றும் நடு நரம்பு ஆகியவற்றை நீக்கிய பின்னரே அதனை பயன்படுத்த வேண்டும்.

*கால்சியம், இரும்புச்சத்து போன்ற சத்துக்கள் வெற்றிலையில் அதிக அளவில் காணப்படுகிறது.

*தலை பாரம் மற்றும் சளி இயற்கையாக கரைய வெற்றிலையை கைகளால் கசக்கி அதன் சாற்றினை மூக்கில் வைத்து உறிய வேண்டும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Views: - 265

0

0