அதிகரித்து வரும் சிறுநீரக பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க உதவும் முத்தான மூன்று சாறுகள்!!!

Author: Hemalatha Ramkumar
1 December 2022, 6:31 pm
Quick Share

உடலில் உள்ள நச்சுக்களை சிறுநீர் வழியாக வெளியேற்றும் பொறுப்பு சிறுநீரகத்தினுடையது. அத்தகைய சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்வது மிகவும் அவசியம். ஆரோக்கியமான உணவை உண்டாமல் இருப்பது, போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது போன்றவை நம் சிறுநீரகத்தை பாதிக்கும் சில பழக்க வழக்கங்கள் ஆகும்.

சிறுநீரகத்தை ஒழுங்காக கவனித்துக் கொள்ளாமல் விட்டு விட்டால் சிறுநீரக கற்கள் முதல் சிறுநீரக இழப்பு வரை பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். ஆகவே, சிறுநீரகத்தை பராமரிக்க உதவும் மூன்று ஜூஸ் வகைகள் குறித்து இப்போது தெரிந்து கொள்ளலாம்.

*சிறுநீரகத்தில் கற்கள் இருக்கும் நபர்களுக்கு தக்காளி ஜூஸ் ஏற்றது. இதற்கு இரண்டு தக்காளியை எடுத்து முதலில் அதிலுள்ள விதைகளை அகற்றவும். பின்னர் அதனை நறுக்கி ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு, மிளகு மற்றும் உப்பு சேர்த்து அரைத்து பருகவும்.

*இரண்டாவதாக நாம் பார்க்க இருப்பது சிட்ரிக் அமிலம் நிறைந்த எலுமிச்சை ஜூஸ். இதுவும் சிறுநீரக கற்களை அகற்ற உதவும். இதற்கு ஒரு சிறிய கிண்ணத்தில் தயிரை எடுத்து கொள்ளவும். இதனுடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து கலந்து குடிக்கவும்.

*சிறுநீரக கல் பிரச்சினை வராமல் தடுக்க துளசி சாறு பயனுள்ளதாக இருக்கும். இதற்கு காலை மற்றும் மாலை ஆகிய இரு வேலைகளிலும் துளசி சாறு மற்றும் தேன் கலந்து சாப்பிடவும்.

Views: - 309

0

0