வாரம் இருமுறை இதுல துவையல் செய்து சாப்பிட்டா மூட்டு வலி இருக்கவங்க கூட எழுந்து ஓடலாம்!!!

Author: Hemalatha Ramkumar
17 June 2023, 7:13 pm
Quick Share

நம் அனைவரும் பிரண்டையைப் பற்றி ஓரளவு தெரிந்து வைத்திருப்போம். மிக எளிதாக கிடைக்கக்கூடிய பிரண்டையானது நம் உடல் நலக்குறைவுகளுக்கு தீர்வு தரும் அற்புத மூலிகை ஆகும். அதிலும் குறிப்பாக எலும்பு தேய்மானம், மூட்டு வலி, எலும்பு தொடர்பான நோய்களுக்கு சிறந்த தீர்வளிக்கிறது.

பிரண்டையில் பல வகைகள் உள்ளன. பட்டை பிரண்டை, உருட்டு பிரண்டை, ஓலை பிரண்டை, கதிர் பிரண்டை, பெரும்பிரண்டை, சிறுபிரண்டை, காட்டுப்பிரண்டை, முப்பிரண்டை, களிபிரண்டை, கணுப்பிரண்டை என பலவகைப் பிரண்டைகள் உள்ளன.

பிரண்டையில் பல வகையான சத்துக்கள் அடங்கியுள்ளது. அவற்றில் உள்ள சத்துக்களில் முக்கியமானது கால்சியம். மேலும் வைட்டமின் சி அதிகம் காணப்படுகிறது. இது தவிர கொழுப்பு, புரதம், நார்சத்து, இரும்பு சத்து ஆகியவையும் பிரண்டையில் உள்ளன.

இதன் சாறு சற்று காரமாக இருப்பதால், நமது உடலில் நேரடியாக படும்போது அரிப்பு ஏற்படுகிறது. இதன் தண்டு மற்றும் வேர் பாகங்கள் மருத்துவ நோக்கத்திற்காக பயன்படுத்தப்படுகின்றன. உணவுப் பொருட்களில் பிரண்டையை சேர்த்துக் கொள்வதன் மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகளில் ஒரு சிலவற்றை காண்போம்.

பிரண்டையில் காணப்படும் அதிக அளவு அஸ்கார்பிக் அமிலம் நமது உடலில் நோய் தொற்று ஏற்படாமல் பாதுகாக்கிறது. பொதுவாக வைட்டமின் சி எனப்படும் அஸ்கார்பிக் அமிலம், நோய்த்தொற்றுகள் மற்றும் நோய்களை எதிர்த்துப் போராடக்கூடிய ரத்த வெள்ளை அணுக்களை அதிகரிக்கிறது. இதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கப்படுகிறது. உடலில் ஏற்படும் காயங்கள் விரைவில் குணமடைய உதவுகிறது.

பிரண்டைக்கு நமது உடலில் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் திறன் உள்ளது. இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி, குளுக்கோஸ் மற்றும் இன்சுலின் அளவுகள் இரத்தத்தில் சரியான அளவு இருப்பதை உறுதி செய்கிறது.

தொடர்ந்து பிரண்டையை உட்கொண்டு வருவதால் நமது உடலில் உள்ள எலும்புகள் வலுவடைகின்றன. பிரண்டையில் உள்ள அதிகப்படியான கால்சியம் சத்து மூட்டுகள் மற்றும் எலும்புகளில் ஏற்படும் தேய்மானம், எலும்புகளின் அடர்த்தி குறைவால் ஏற்படும் எலும்புகளின் பலவீனத்தை முற்றிலும் நீக்குகிறது.

உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு பிரண்டை ஒரு சிறந்த மருந்தாகும். உடல் எடையை குறைப்பதோடு மட்டும் இல்லாமல் உடலில் இருக்கும் எல்டிஎல் எனப்படும் கெட்ட கொழுப்பையும் குறைக்க உதவுகிறது.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Views: - 347

0

0