சென்னையில் காணாமல் போன 10 மீனவர்கள் : 55 நாட்களுக்கு பிறகு மியான்மரில் மீட்பு..!

15 September 2020, 8:49 am
Quick Share

ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்று காணமல் போன 10 மீனவர்கள் மியான்மர் நாட்டில் மீட்கப்பட்டுள்ளனர்.

சென்னை காசிமேட்டில் இருந்து கடந்த ஜூலை 23ஆம் தேதி பாலாஜி என்பவருக்கு சொந்தமான விசை படகில் மீனவர்கள் 10 பேர் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்று கரை திரும்பவில்லை.

கடலுக்குள் 70 நாட்டிக்கல் தூரத்தில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் 7 நாட்களில் கரைக்கு திரும்ப வேண்டும். ஆனால், 55 நாட்களுக்கு மேலாகியும் அவர்கள் கரை திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த மீனவர்களின் குடும்பத்தினர், காசிமேடு மீன்வளத்துறை உதவி இயக்குனர், காசிமேடு மீன்பிடி துறைமுகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மீனவர்களின் குடும்பத்தினர் மறியல் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், மாயமான 10 மீனவர்களும் பத்திரமாக மியான்மர் நாட்டில் இருப்பதாக மீன்வளத்துறை அலுவலகத்துக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதுகுறித்து மீனவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து அவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். இதனை தொடர்ந்து, மியான்மரில் உள்ள மீனவர்களை மீட்டுவர தமிழக மீன்வளத்துறை மற்றும் கடலோர காவல் படையினர் விரைந்துள்ளனர்.

Views: - 8

0

0