திருப்பூரில் தையல் பயிற்சிக்கு சென்ற பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் வன்கொடுமை : வாலிபர் கைது!!

28 November 2020, 1:39 pm
Pocso Arrest - Updatenews360
Quick Share

திருப்பூர் : பத்தாம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் போயம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மகள் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். வகுப்புகள் எதுவும் நடைபெறாமல் வீட்டில் இருந்த காரணத்தால், வீட்டின் அருகிலேயே உள்ள தையல் பயிற்சி பள்ளிக்கு சென்றுள்ளார்.

அங்கு முகமது மைதீன் என்ற வாலிபருடன் காதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக கூறி, தனது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனையடுத்து விவரம் அறிந்து சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில், திருப்பூர் வடக்கு மகளிர் போலீசார் முகமது மைதீன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Views: - 23

0

0