அடுத்த 2 நாட்களுக்கு வெளியே சுத்தாதீங்க : 11 மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்குமாம்..!

23 May 2020, 4:19 pm
Summer girls - updatenews360
Quick Share

சென்னை : சென்னை உள்பட 11 மாவட்டங்களில் அடுத்த இரு தினங்களுக்கு வெயில் வாட்டியெடுக்கும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- அடுத்த 24 மணிநேரத்திற்கு தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். சென்னையை பொறுத்தவரையில் வானம் தெளிவாகவே காணப்படும். அதிகபட்சமாக 40 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 30 டிகிரி செல்சியசும் வெப்பநிலை இருக்கும்.

குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருநெல்வேலி, திருச்சி, கரூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் அதிகபட்சமாக 40 முதல் 42 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையை ஒட்டி இருக்கும். எனவே, காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அதேபோல, தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் காற்றின் வேகம் 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் வீசுவதால், அப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply