ஆன்லைன் வகுப்பு புரியவில்லை: தற்கொலை செய்துகொண்ட 11 ஆம் வகுப்பு மாணவன்!

2 September 2020, 5:58 pm
Quick Share

தேனி: ஆண்டிப்பட்டியில் ஆன்லைன் வகுப்பு புரியாததால் 11ஆம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அருகில் வைகை அணை செல்லும் வழியில் கரட்டுப்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோவன், இவருடைய மனைவி ஜோதி. இவர்களுக்கு விக்கிரபாண்டி (16)என்ற மகன் உள்ளார். இவர் திருச்சியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். இந்நிலையில் தற்போது கெரோனா தொற்று பரவாமல் இருப்பதற்காக பள்ளிகள் அனைத்தும் தற்போது வரை மூடியுள்ளது. இதனால் பள்ளி பாடங்கள் நடத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. தற்பொழுது மாணவர்களுக்கு பெரும்பாலான பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகள் தற்போது நடத்தப்பட்டு வருகின்றன.

இவருக்கும் ஆன்லைன் படிப்புகள் நடத்தப்பட்டதாக தெரிகிறது. ஆனால் நடத்தப்படும் பாடங்கள் இவருக்கு புரியவில்லை என்றும், கடந்த சில தினங்களாக மன உளைச்சலில் இருந்ததாகவும், பெற்றோர் கண்டித்ததால் இன்று காலை வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையறிந்த பெற்றோர் உடனாடியாக க.விலக்கு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் தகவலறிந்த கானா விளக்கு காவல் துறையினர் உடனடியாக அப்பகுதிக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மாணவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில் கரட்டு பட்டி கிராமம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பாக டீ சுப்புலாபுரம் பகுதியை சேர்ந்த ஒரு மாணவர் ஆன்லைன் வகுப்பு புரியவில்லை என்பதால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த நிலையில், தற்பொழுது கரட்டுபட்டியை சேர்ந்த மாணவரும் தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியையும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. பள்ளி மாணவர்களுக்கு இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருப்பதற்கு கவுன்சிலிங் நடத்தப்பட வேண்டும் என்று அப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Views: - 0

0

0