17 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை: கோவை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு

Author: Udayaraman
3 August 2021, 9:14 pm
Quick Share

கோவை: கோவையில் 17வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி கோவை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கோவையை சேர்ந்த 17 வயது சிறுமியை காணாமல் போனதாக அவரது பெற்றோர் சார்பில் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு புகார் அளிக்கப்படுகிறது. புகார் அளிக்கப்பட்ட, இரு வாரத்திற்கு பிறகு சிறுமியை காவல்துறையினர் மீட்டு, விசாரணை செய்ததில், கோவை மேட்டுப்பாளையத்தை அடுத்த இடையளர்பாளையத்தைச் சேர்ந்த கார்த்திக் (20) என்பவரை காதலித்து, அவருடன் சென்றதாகவும், அப்போது திருமணம் செய்துக்கொள்வதாக கூறி பாலியட்டால் வன்கொடுமை செய்து, திருமணம் செய்துக்கொண்டதாக சிறுமி கூறியுள்ளார். சிறுமி வாக்குமூலத்தின் அடிப்படையில், கார்த்திக்கை கைது செய்த காவல்துறையினர்,

ஆள் கடத்தல், குழந்தை திருமணம் தடுப்பு சட்டம், போக்சோ ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. விசாரணையை முடிவடைந்து தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில், கார்த்திக்கிற்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்ததோடு, நேரில் ஆஜராகாததால் பிடிவாரண்ட் பிறப்பித்து கோவை போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிபதி பரிந்துரை செய்துள்ளார்.

Views: - 154

0

0