குடும்பத்துடன் விஷமருந்தி 3 பேர் தற்கொலை: உறவினர் வீட்டிக்கு சென்றபோது பரிதாபம்…!!

15 January 2021, 5:59 pm
sucide - updatenews360
Quick Share

விருதுநகர்: இராஜபாளையம் லாட்ஜில் கோயம்புத்தூரைச் சேர்ந்த தம்பதியினர் உள்பட 3 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் குருவையாராஜா தெருவை சேர்ந்தவர் ஜனார்த்தன ராஜ. பல ஆண்டுகளுக்கு முன்பே கோயம்புத்தூர் பகுதியில் நிரந்தரமாக குடியேறிவிட்டார். வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று இராஜபாளையத்தில் குருவுராஜா தெருவில் உள்ள உறவினர்கள் வீட்டுக்கு ஜனார்ந்தன ராஜா, இவரது மனைவி கலாவதி, மகன் சித்தார்த் 3 பேரும் உறவினர் வீட்டுக்கு வந்ததனர்.

அங்கு வந்த அவர்கள், இராஜபாளையம் மருத்துவமனை ரோட்டில் உள்ள தனியார் லாட்ஜில் அறை எடுத்துத் தங்கி உள்ளனர். இந்நிலையில் இன்று அவர்கள் 3 பேரும் மயங்கி நிலையில் லாட்ஜின் அறையி கிடந்துள்ளனர். லாட்ஜ் ஊழியர்கள் மூன்று பேரையும் இராஜபாளையம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முயற்சி செய்துள்ளனர்.

அதற்குள் சிறுவன் சித்தார்த் அங்கேயே உயிரிழந்துள்ளார். ஜனார்த்தனா ராஜா மற்றும் இவரது மனைவி கலாவதி இருவரையும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியில் கலாவதி உயிரிழந்தார். ஜனார்த்தன ராஜா இராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ராஜபாளையம் பகுதியில் உறவினர்கள் இருக்கும் நிலையில் இவர்கள் ஏன் லாட்ஜில் அறை எடுத்து தங்கி உள்ளனர்? தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து இராஜபாளையம் வடக்கு காவல் நிலைய காவலர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 0

0

0