பட்டாகத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய 3 பேர் கைது

19 June 2021, 10:31 pm
Quick Share

திருவள்ளூர்: புழல் ஏரியில் பிறந்த நாள் விழாவில் பட்டாகத்தியில் கேக் வெட்டிய வீடியோ சமூக வலைதளத்தில் பரவியதால் பொது மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக மூன்று பேரை கைது செய்து போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் நாரவாரிகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்தன். இவர் இருசக்கர வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஓட்டும் கடையில் பணிபுரிந்து வந்தார். இவரது பிறந்தநாள் கடந்த 17ஆம் தேதி நடைபெற்றுள்ளது.இவருடைய நண்பர் அதே பகுதியை சேர்ந்த பிரவீன் குமார் மற்றும் பால்பண்ணை பகுதியை சேர்ந்த சம்பா ஆகிய மூவரும் புழல் ஏரிக்கரையில் பிறந்தநாளை பட்டாகத்தியில் வெட்டி கொண்டாடிய வீடியோக்கள் டிக் டாக் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியானது.

இதை தொடர்ந்து பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் விதமாக பட்டாகத்தியில் கேக் வெட்டி சமூகவலைத்தளங்களில் வெளியிட்ட சம்பவம் தொடர்பாக செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு அரவிந்தன் மற்றும் பிரவீன் குமார் இருவரையும் கைது செய்தனர். மேலும் மாதவரம் பால்பண்ணை பகுதியைச் சேர்ந்த சாம்பாவை பால்பண்ணை போலீசார் கைது செய்ததை தொடர்ந்து விசாரணைக்கு பின்னர் மூன்று பேரையும் பொன்னேரி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர். பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 123

0

0