37-சிறப்பு ரயில்கள் ரத்து.. தெற்கு ரயில்வே அறிவிப்பு!!

6 May 2021, 3:38 pm
Spl Train - Updatenews360
Quick Share

சென்னை: கொரோனா பரவல் காரணமாக பயணிகள் எண்ணிக்கை குறைந்ததால் 37 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. .

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. தமிழகத்தில் கொரோனாவால் தினந்தோறும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக 20 ஆயிரத்தையும் தாண்டி பதிவாகி உள்ளது. இதேபோல இறப்பு விகிதமும் அதிகரித்து வருகிறது. நோய் பரவலை தடுப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதனிடையே, இன்று முதல் 20ம் தேதி காலை 4 மணி வரை புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது.

இந்நிலையில், பயணிகள் ரயில், மெட்ரோ ரயில், தனியார் பேருந்துகள், அரசு பேருந்துகள் மற்றும் வாடகை டாக்சி ஆகியவற்றில் 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பொதுமக்கள் அமர்ந்து பயணிக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

இதனையடுத்து, பயணிகள் எண்ணிக்கை குறைந்ததால் தெற்கு ரயில்வே 37 சிறப்பு ரயில்களை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.

Views: - 107

1

0