கொரோனா பரவல் அச்சம்: மதுரையில் நடைபெற்ற யூபிஎஸ்சி தேர்வில் 68% பங்கேற்கவில்லை..!!

Author: Aarthi Sivakumar
8 August 2021, 5:00 pm
Quick Share

மதுரை: கொரோனா அச்சம் காரணமாக மதுரையில் நடைபெற்ற வரும் யூ.பி.எஸ்.சி தேர்வில் 68 சதவீதம் பேர் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையில் உதவி ஆணையர் பணிக்கான எழுத்து தேர்வை யூ.பி.எஸ்.சி தேர்வாணையம் இன்று மதுரை மாவட்டத்தில் 6 மையங்களில் நடைபெற்றது. மதுரை, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, தூத்துக்குடி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தேர்வு எழுத விண்ணப்பம் செய்திருந்தனர்.

கொரானா தடுப்பு நடவடிக்கையாக காலையில் ஒரு பகுதியாகவும், மாலையில் ஒரு பகுதியாகவும் தேர்வு நடைபெறுகிறது. காலையில் நடைபெற்ற தேர்வில் பங்கேற்க 2,382 தேர்வர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் கொரோனா அச்சம் காரணமாக 759 தேர்வர்கள் மட்டுமே தேர்வில் பங்கேற்றனர்.

1,623 தேர்வர்கள் தேர்வில் பங்கேற்கவில்லை. முன்னதாக ஒவ்வொரு தேர்வு மையங்களுக்கும் நேரில் சென்ற மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் தேர்வுக்கு செய்யப்பட்ட ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.

Views: - 411

0

0