அமலுக்கு வந்தது 7ம் கட்ட ஊரடங்கு…! கடைகள் கூடுதலாக 1 மணி நேரம் இயங்கலாம்

1 August 2020, 10:12 am
Quick Share

சென்னை: கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்ட 7ம் கட்ட ஊரடங்கு நடைமுறைக்கு வந்துள்ளது.

உலகம் முழுவதும் பரவிய கொரோனா இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. நாடு முழுவதும் உள்ள மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17 லட்சத்தை நெருங்குகிறது.

இந்த கொரோனாவை கட்டுப்படுத்த நாடெங்கிலும் 6 கட்டங்களாக ஊரடங்குகள் அமல்படுத்தப்பட்டன. ஆனாலும் கொரோனா கட்டுக்குள் வரவில்லை.

இதையடுத்து 7ம் கட்ட ஊரடங்கு தமிழகத்தில் வரும் 31ம் தேதி வரை நீட்டித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த ஊரடங்கு இப்போது நடைமுறைக்கு வந்துள்ளது.

சென்ற முறை என்ன கட்டுப்பாடுகள், தளர்வுகள் உள்ளதோ அது அப்படியே தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொஞ்சம் மாறுதலாக கடைகள் திறக்கப்படும் நேரம் 1 மணி கூடுதல் நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

சிறிய கோவில்களின் தரிசனத்திற்கு அனுமதி தரப்பட்டுள்ளது.  காய்கறி, மளிகை கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்கும். மற்ற கடைகள், காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை திறக்கப்படும்.

மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல, வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வர சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள், சென்னை மாநகராட்சி ஆணையரிடம் இ பாஸ் பெற வேண்டும்.

Views: - 9

0

0