பாலமேடு ஜல்லிக்கட்டில் முதல் பரிசு அறிவித்ததில் முறைகேடு? 2ஆம் பரிசு பெற்ற வீரர் புகார் மனு!!

19 January 2021, 4:00 pm
Palamedu Jalli - Updatenews360
Quick Share

மதுரை : பாலமேடு ஜல்லிக்கட்டில் முதல் பரிசு அறிவித்ததில் முறைகேடு நடைபெற்று உள்ளதாக 2 ஆம் பரிசு பெற்ற மாடுபிடி வீரர் பிரபாகரன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜனவரி 15 ஆம் தேதி நடைபெற்ற ஜல்லிக்கட்டில் பொதும்புவை சேர்ந்த பிரபாகரன் என்கிற மாடுபிடி வீரர் 17 காளைகளை அடங்கி முதல் இடத்தில் இருந்தார்.

அப்போது ஜல்லிக்கட்டு விழாக் குழுவினர் இரண்டாம் இடத்தை பெற்ற மாடுபிடி வீரருக்கு முதல் பரிசான காரை கொடுத்ததாகவும், இது குறித்து விழாக்குழுவினரிடம் கேட்ட போது முறையான பதில் அளிக்கவில்லை என பிரபாகரன் கூறியுள்ளார்.

இதனால் 2 ஆம் பரிசை ஏற்காமல் புறப்பட்டு சென்றதாகவும், ஜல்லிக்கட்டு வீடியோ காட்சிகளை பார்த்து முதல் பரிசை முறையாக அறிவிக்க வேண்டும் என பிரபாகரன் மாவட்ட ஆட்சியர் த.அன்பழகனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

முன்னதாக கோரிக்கையை வலியுறுத்தி மாடுபிடி வீரர் பிரபாகரனுடன் அப்பகுதியை சேர்ந்த 50 க்கும் மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடதக்கது.

Views: - 0

0

0